பதிவு பெற்ற மருத்துவமனைகளில் போலி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தால் பதிவு ரத்து

பதிவு பெற்ற மருத்துவர்கள் நடத்தும் தனியார் மருத்துவமனைகளில் போலி மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளித்தால் மருத்துவப் பதிவை ரத்து செய்ய மருத்துவக் கழகத்துக்கு பரிந்துரை செய்யப்படும்

பதிவு பெற்ற மருத்துவர்கள் நடத்தும் தனியார் மருத்துவமனைகளில் போலி மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளித்தால் மருத்துவப் பதிவை ரத்து செய்ய மருத்துவக் கழகத்துக்கு பரிந்துரை செய்யப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா எச்சரித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
காஞ்சிபுரம் மாவட்டம், புதுபெருங்களத்தூரில் முறையான பதிவுபெற்ற மருத்துவர்களால் காமாட்சி மருத்துவமனை நடத்தப்படுகிறது. 
இதில், போலி மருத்துவர்கள் காய்ச்சலுக்காக சிகிச்சை அளித்து வருகின்றனர் என பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன. 
இதையடுத்து, அந்த மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை 'சீல்'
வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுபோன்ற செயல் மக்களின் உயிரையே மாய்க்கும், மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, தனியார் மருத்துவமனைகளுக்கு அரசின் அங்கீகாரம் இருந்தும் அம்மருத்துவமனைகளில் பதிவுபெற்ற மருத்துவரைத் தவிர தகுதியற்ற மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கக்கூடாது. 
மாறாக, அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல், முறையாக மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவர்களின் பதிவை ரத்து செய்ய மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு பரிந்துரைக்கப்படும் என அறிக்கையில் ஆட்சியர் தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com