இலவச இருதய நோய் பரிசோதனை முகாம்

மதுராந்தகம் தொன்மை நகர அரிமா சங்கம், அனைத்து வணிகர் பொதுநலச் சங்கம், சென்னை அப்போலோ மருத்துவமனை ஆகியன இணைந்து இலவச இருதய நோய் பரிசோதனை முகாமை நடத்தின.

மதுராந்தகம் தொன்மை நகர அரிமா சங்கம், அனைத்து வணிகர் பொதுநலச் சங்கம், சென்னை அப்போலோ மருத்துவமனை ஆகியன இணைந்து இலவச இருதய நோய் பரிசோதனை முகாமை நடத்தின.
 மதுராந்தகம் கார்னேஷன் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருநாள்கள் நடைபெற்ற இம் முகாமை வணிகர் பொதுநலச் சங்க மாவட்ட நிர்வாகி அமல்ராஜ் தொடங்கி வைத்தார். அரிமா சங்கத் தலைவர் ஜி.ஜே.பிரபாகரன் தலைமை வகித்தார்.சென்னை அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் ராகேஷ், ஜேக்கப், ஹோலீஸ், ஜெயகுமார் ஆகியோர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினர் பங்கேற்று, பொதுமக்களுக்கு இருதய நோய் தொடர்பான ரத்த அழுத்தம், ஈ.சி.ஜி, எக்கோ கார்டியோகிராம், ரத்த சர்க்கரை பரிசோதனை ஆகியவற்றை செய்தனர்.
 மதுராந்தகம், சோத்துப்பாக்கம், கருங்குழி, மாம்பாக்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 350 நோயாளிகள் பரிசோதனை செய்து கொண்டனர். அவர்களில் 11 பேர் அறுவைச் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
 இம்முகாமில், அனைத்து வணிகர் பொதுநலச்சங்க நிர்வாகிகள் அப்துல்சமது, ஹீராலால், எஸ்.தட்சிணாமூர்த்தி, பவித்ரா சீனுவாசன், அரிமா சங்க நிர்வாகிகள் டி.நாராயணமூர்த்தி, கணேஷ்குமார், தியாகி ஓ.நா.துரைபாபு அறக்கட்டளைத் தலைவர் துரை பிருதிவிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com