டெங்கு கொசு ஒழிப்புப் பணி: திட்ட இயக்குநர் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் தண்டலம், கீவளூர் ஊராட்சிகளில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநர் ஜெயக்குமார் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் தண்டலம், கீவளூர் ஊராட்சிகளில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநர் ஜெயக்குமார் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
 ஊராட்சி பகுதிகளில் உள்ள பழைய இரும்புக் கடைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், இறைச்சிக் கடைகள், வீடுகள் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.
 அப்போது, டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த கடைகள் மற்றும் வீடுகளின் உரிமையாளர்கள் 10 பேருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார்.
 மேலும், இந்த இரண்டு ஊராட்சிகளிலும் உள்ள தெருக்குழாய்களுக்கு மஞ்சள் வண்ணம் பூசவும், வீட்டுக் குழாய்களுக்கு பச்சை வண்ணம் பூசவும் நடவடிக்கை மேற்கொள்ள ஊராட்சி செயலாளர்களை அறிவுறுத்தினார்.
 கீவளூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் கார் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் இரண்டு தனியார் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் திட்ட இயக்குநர் ஜெயகுமாரிடம் புகார் தெரிவித்தனர்.
 இதையடுத்து குறிப்பிட்ட இடங்களில் ஆய்வு செய்த அவர், தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கால்வாய்களை அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கழிவுநீர் கால்வாய்கள் உடனடியாக அடைக்கப்பட்டன. இந்த ஆய்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் உமா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தான
 கிருஷ்ணன், சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன், ஊராட்சி செயலாளர்கள் ரமேஷ், ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com