வாக்காளர் பெயர் திருத்தம்: மேலும் ஒரு மாத காலம் நீட்டிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், நீக்கம், சேர்த்தலுக்கு மேலும் ஒரு மாத காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், நீக்கம், சேர்த்தலுக்கு மேலும் ஒரு மாத காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
 இதுகுறித்த மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பா.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2018-க்கான வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, 4005 வாக்குச் சாவடிகளிலும் 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்கவும், நீக்கம், திருத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், நீக்கம் செய்ய www.nvsp.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். படிவம் 6-இல், 18 வயதுக்கு மேற்பட்டவர் வாக்காளர் பட்டியலில் சேரவும், படிவம் 7- இல் வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கவும், படிவம் 8-இல் ஒரே தொகுதிக்குள் இடம் பெயர்ந்து இருப்பின் சரியான முகவரிக்கு மாற்றிக்கொள்ள விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் கோட்ட அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வட்டாட்சியர் அலுவலர், நகராட்சி அலுவலர் ஆகிய அரசு அலுவலகங்களில் மனுக்கள் பெற்று பூர்த்தி செய்தும் வழங்கலாம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள நவம்பர் 30- ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, வாக்காளர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com