காலியாக உள்ள முத்திரைக் கொல்லர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

முத்திரை ஆய்வர் அலுவலகங்களில் காலியாக உள்ள முத்திரைக் கொல்லர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

முத்திரை ஆய்வர் அலுவலகங்களில் காலியாக உள்ள முத்திரைக் கொல்லர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய முத்திரை ஆய்வர் அலுவலகங்களில் 16 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்கள், இனசுழற்சி அடிப்படையில் நேரடி நியமனம் மூலமாக நிரப்பட உள்ளன. 
இதற்கான வயது வரம்பு 2017, ஜூலை 1ஆம் தேதி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு 30 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, சீர்மரபினருக்கு 32 வயதுக்குள்ளும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். 
இப்பணிக்கான விண்ணப்பங்களை சென்னையிலுள்ள கூடுதல் தொழிலாளர் ஆணையர், தொழிலாளர் இணை ஆணையர்-1, தொழிலாளர் இணை ஆணையர் -2, வேலூரில் உள்ள தொழிலாளர் இணை ஆணையர் ஆகிய அலுவலகங்களிலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுலகங்களிலும், கட்டணம் ஏதுமின்றி பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அட்டை, முன்னுரிமைக்கான சான்றிதழ்கள், கல்விச் சான்றிதழ்கள் ஆகியவற்றை இணைத்து வரும் மே மாதம் 10 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவு அஞ்சலிலோ கிடைக்கும்படி, கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நல வாரியக் கட்டடம், 6 ஆவது தளம், டிஎம்எஸ் வளாகம், சென்னை-600 006 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ரவி ஜெயராம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com