சுயதொழில் தொடங்க மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.4.5 லட்சம் மானியம்: ஆட்சியர் வழங்கினார்

சுயதொழில் தொடங்குவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.4.5 லட்சம் மானியத்தை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை வழங்கினார்.
ஆட்சியரிடமிருந்து சுயதொழில் தொடங்க மானியம் பெறும் மாற்றுத்திறனாளிகள். 
ஆட்சியரிடமிருந்து சுயதொழில் தொடங்க மானியம் பெறும் மாற்றுத்திறனாளிகள். 

சுயதொழில் தொடங்குவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.4.5 லட்சம் மானியத்தை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்
கிழமை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில், மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுயதொழில் தொடங்குவதற்கு வங்கிக் கடனுடன் கூடிய மானியம் வழங்கப்பட்டு வருகிறது. 
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர்முகாமில் வங்கிக்கடன் மானியத் திட்டத்தின் கீழ் சுய
தொழில் புரியும் 45 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 10 ஆயிரம் வீதம் மானியமாக ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை ஆட்சியர் பா.பொன்னையா வழங்கினார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக வங்கிக் கடன் திட்டம் சார்பில், செல்லிடப்பேசி பழுதுநீக்கம் செய்தல், ஜெராக்ஸ் கடை, பெட்டிக்கடை, சிற்றுண்டிக் கடை, துணி வியாபாரம், கறவை மாடு, புத்தக வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களைப் புரிய இம்மானியம் வழங்கப்பட்டுள்ளது. மானியம் பெற்ற அனைவருக்கும் தொழில் தொடங்கி பொருளாதாரத்தில் முன்னேற்றமடையுமாறு ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும், 2018-19 ஆம் நிதியாண்டு முதல் தமிழக முதல்வரின் மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் வங்கிக் கடன் மானியம் வழங்கும் திட்டத்தில் பெற்று வரும் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படவுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார். 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத், பேச்சுப் பயிற்சியாளர் பிரபாகரன், உதவியாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com