பள்ளிகளில் சுதந்திர தின விழா கோலாகலம்

மதுராந்தகம் சௌபாக்மல் சௌகார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியை பி.விஜயகுமாரி
பள்ளிகளில் சுதந்திர தின விழா கோலாகலம்


மதுராந்தகம் சௌபாக்மல் சௌகார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியை பி.விஜயகுமாரி வரவேற்றார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் டி.யூ.சந்திரபிரகாஷ் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் எஸ்.டி.அசோக்குமார், இணைச் செயலர் எஸ்.டி.மனோகர்குமார், பொருளாளர் வி.அமுல்ராஜ், கல்விக் குழு நிர்வாகிகள் ஆர்.செல்வி, பி.ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. உதவித் தலைமை ஆசிரியர் எஸ்.மகாலட்சுமி நன்றி கூறினார்.
மதுராந்தகம் மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் வி.சுபத்ரா தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றினார். துணை முதல்வர் எஸ்.திருமலை வரவேற்றார். நிகழ்ச்சியில், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் எம்.முரளி, சி.முருகேஷ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.
ஒரத்தி அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில்...
 மதுராந்தகத்தை அடுத்த ஒரத்தி அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியை செ.சாந்தி தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றினார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பி.முனுசாமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்களும்,பள்ளிக்குழந்தைகளும் கலந்து கொண்டனர். பின்னர் பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
செய்யூர் வட்டம், வெண்ணாங்குபட்டு அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில், நடைபெற்ற விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியர் டி.சேகர் முன்னிலை வகித்தார். 
தமிழாசிரியர் மு.ஜெயசீலன் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சி.நவகோட்டி தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றினார். செய்யூர், சித்தாமூர் வட்ட அளவில் பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, இவ்விழாவில் பரிசுகள் வழங்கப்பட்ட. பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சூனாம்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியர் கமலி வரவேற்றார். 
பள்ளித் தலைமை ஆசிரியர் உதயகுமார் தலைமை வகித்து, கொடியை ஏற்றினார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், வீட் அறக்கட்டளை நிறுவனர் கோபுராஜ், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் கதிரவன், முன்னாள் கூட்டுறவு வங்கித் தலைவர் தெய்வசிகாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
சமூக சேகவகர் ரவி கிரிஜா 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சீருடைகளை இலவசமாக வழங்கினார்.
விழாவில், நன்கொடையாளர்களின் மூலம் சுமார் 1500 நூல்கள் பெறப்பட்டு, பள்ளிக் குழந்தைகளுக்கு நூலகம் திறக்கப்பட்டது.
செங்கல்பட்டில்...
செங்கல்பட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, செங்கல்பட்டு தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் தலைமை வகித்தார். இதில், தீயணைப்பு வீரர்களின் அணிவகுப்புடன் வருவாய்த் துறை வட்டாட்சியர் ரமா, கிராம நிர்வாக அலுவலர் செல்வம், வருவாய் அலுவலர் சார்லஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கோட்டாட்சியர் வடிவேல் முருகன் கொடியினை ஏற்றி வைத்தார்.
செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி வசந்தலீலா கொடியினை ஏற்றிவைக்க, நீதிபதிகள், வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இனிப்பு வழங்கினர். 
செங்கல்பட்டு நகராட்சி சார்பில், நகராட்சி அலுவலகத்துக்கு எதிரில் உள்ள காந்தி சிலை, பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலை, நகராட்சிக்கு இடம் வழங்கிய வேதாசல முதலியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து, தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தப்பட்டது. 
விழாவில் நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி, பொறியாளர் ரவிச்சந்திரன், உதவிப்பொறியாளர் நித்யா, சுகாதார அலுவலர் டாக்டர் சித்ரசேனா, முன்னாள் நகர்மன்றத் தலைவர் குப்பன், முன்னாள் துணைத் தலைவர் கிரிபாபு, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் உஷா சதாசிவன் கொடியேற்றினார். துணை முதல்வர் அனிதா, ஆர்எம்ஓ, மருத்துவக் கண்காணிப்பாளர், மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஎஸ்பி கந்தன் கொடி ஏற்றினார். நகர காவல் நிலையத்தில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் செளந்தரராஜன், எஸ்.ஐ.க்கள், ஊர்க் காவலர்கள், காவலர்கள் பங்கேற்றனர். கிராமிய காவல் நிலையத்தில் ஆய்வாளர் சக்திவேல், கூடுவாஞ்சேரி காவல் துணைக் கண்காணிப்பாளர் வளவன், ஆய்வாளர்கள் சரவணன் (கூடுவாஞ்சேரி) வடிவேல் முருகன் (மறைமலைநகர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு அறிஞர் அண்ணா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தலைமை வகித்து, தேசியக் கொடியினை ஏற்றிவைத்தார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கே.கிரிபாபு, அரிமா சங்க நிர்வாகிகள் பெர்னால்டு, வெங்கடேசன், விஜயகுமார் சேவியர், ஆனந்தராமன், பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com