ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டில் சுதந்திர தின விழா

ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீதா.சீனிவாசன், வசுமதி ஆகியோர் கொடியேற்றி, மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டில் சுதந்திர தின விழா


ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீதா.சீனிவாசன், வசுமதி ஆகியோர் கொடியேற்றி, மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
இதில், வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள், கச்சிப்பட்டு அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் பிரேமா கொடியேற்றினார். 
ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில், ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே நகர காங்கிரஸ் பொறுப்பாளர் எஸ்.ஏ.அருள்ராஜ் கொடியேற்றினார். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 
குன்றத்தூர் ஒன்றியம், ஒரத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளி தலைமையாசிரியர் கவிதா கொடியேற்றி, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் என்.டி.சுந்தர் கலந்து கொண்டு மரக்கன்று நட்டு வைத்தார். 
ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் நடைபெற்ற விழாவில், மையத்தின் பதிவாளர் சந்திரமோகன் கொடியேற்றினார். மேலும் மைய வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார். பேராசிரியர்கள் இந்திரஜித் ஜோதி, சாகு, வசந்தி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில்...
செங்கல்பட்டு காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் (பொறுப்பு) ஜே.பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற விழாவில், கட்சி நிர்வாகிகள் டி.ஜெயக்குமார், முருகன், ரியாஸ்பாய், பேட்டரி கனகராஜ், ராஜேந்திரன், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலர் ஊர்வலமாக வந்து நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள காந்தி சிலை அருகில் கொடி ஏற்றினர். 
பின்னர், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து ஊர்வலமாகச்சென்றவர்கள், பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதுராந்தகத்தில்..
மதுராந்தகம் செங்குந்தர்பேட்டை ஜே.ஜே.அறக்கட்டளை சார்பில், நிறுவனத்தின் 6-ஆம் ஆண்டு விழா, சுதந்திர தினவிழா மற்றும் அரசு பொதுத் தேர்வுகளில் சாதனை படைத்தவர்களுக்கு பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. 
அறக்கட்டளை செயலர் ஜே.ஞானசாந்தி வரவேற்றார். தலைவர் டி.ஜெர்லின்ஜோஸ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர் அ.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
இரா. எல்லப்பன் திருக்குறள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சியை நடத்தினார். மதுராந்தகம் வட்டாரத்தில் 10, 12-ம் வகுப்பு அரசின் பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகைகளும் வழங்கப்பட்டன. பள்ளிக் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் 
நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com