பொதுத் தேர்வுகள்: ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய பொதுத் தேர்வுகளுக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஆட்சியர் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய பொதுத் தேர்வுகளுக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஆட்சியர் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழாண்டு நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், வரும் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 வரை பிளஸ் 2 வகுப்புக்கும், மார்ச் 7 முதல் ஏப்ரல் 16 வரை பிளஸ் 1 வகுப்புக்கும், பத்தாம் வகுப்புக்கு மார்ச் 16 முதல் ஏப்ரல் 20 வரையிலும் நடைபெற உள்ளது. இதில் பிளஸ் 2 தேர்வுக்கு 349 பள்ளிகளில், 119 தேர்வு மையங்களிலிருந்து 49,973 மாணவர்களும், பிளஸ் 1 தேர்வுக்கு 360 பள்ளிகளிலிருந்து, 119 தேர்வு மையங்களிலிருந்து 47,300 மாணவர்களும், பத்தாம் வகுப்பு தேர்வுக்கு 610 பள்ளிகளிலிருந்து 157 தேர்வு மையங்களில் 52,895 மாணவர்களும் தேர்வு எழுதவுள்ளனர். இத்தேர்வுக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் திங்கள்
கிழமை மாலை நடைபெற்றது. 
கூட்டத்தில், பங்கேற்ற ஆட்சியர் பொன்னையா, வினா-விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். தேர்வு நடைபெறும் நாள்களில் காவலர்களை பாதுகாப்புக்காக நியமிக்க வேண்டும், பொதுத்தேர்வு நடைபெறும் நாள்களில் தடையின்றி மின்சாரம் வழங்க உறுதி செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதுபோல், தேர்வு நடைபெறும் நாள்களில் தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் சென்று வரும் வகையில், கிராம பகுதிகள், இதர பகுதிகளில் இருந்து பேருந்து வசதி, நகராட்சிக்கு உள்பட்ட தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர், கழிப்பறை, சுற்றுப்
புறத் தூய்மை உள்ளிட்ட வசதிகள் தேர்வு நடைபெறும் வளாகத்தில் இருக்கவேண்டும் எனவும் ஆட்சியர் அறிவுறுத்தினார். 
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் நூர்முகமது, சார் ஆட்சியர்கள் ஜெயசீலன், கிள்ளி சந்திரசேகர், உதவி ஆட்சியர் ரத்தினா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி, கோட்டாட்சியர்கள் ராஜு, ராஜேந்திரன், காவல்துறை துணைக் கண்காணிப்பு அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக். பள்ளி ஆய்வாளர், அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர், நகராட்சி ஆணையர், செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com