குழந்தைகள் உள்பட 14 கொத்தடிமைகள் மீட்பு: வருவாய்த் துறையினர் நடவடிக்கை

திருப்போரூரை அடுத்த கானாத்தூரில் தனியார் சவுக்குத் தோப்பில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த குழந்தைகள் உள்பட 14 இருளர் சமுதாயத்தினர் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனர்.

திருப்போரூரை அடுத்த கானாத்தூரில் தனியார் சவுக்குத் தோப்பில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த குழந்தைகள் உள்பட 14 இருளர் சமுதாயத்தினர் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனர்.
கானாத்தூர் செட்டிக்குப்பம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 100 ஏக்கர் நிலத்தில் உள்ள சவுக்குத் தோப்பில் கொத்தடிமைகளாக திருக்கழுகுன்றத்தையடுத்த சூராடி மங்கலம் தேவராஜ் (75), விஜயன் ( 70), கேளம்பாக்கத்தைச் சேர்ந்த ரஞ்சித் (23) மற்றும் 4 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 14 பேர் குடும்பத்துடன் வேலை பார்த்து வந்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.1000 கூலியாக வழங்கப்பட்டதாகத்தெரிகிறது.
இதுகுறித்து தகவலறிந்த திருப்போரூர் வட்டாட்சியர் விமல்குமார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். 
கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்தது உண்மை எனத் தெரிய வந்ததையடுத்து சார் ஆட்சியருக்கு தகவல் கொடுத்தார். செங்கல்பட்டு சார் ஆட்சியர் ஜெயசீலன், வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறையில் நேரில் சென்று கொத்தடிமைகளாக வேலைப் பார்த்து வந்தவர்களை மீட்டனர்.
இதனையடுத்து செங்கல்பட்டு சார் ஆட்சியர் ஜெயசீலன் மீட்கப்பட்ட கொத்தடிமைகளுக்கு அரிசி, வேட்டி சேலைகள் வழங்கி, அவர்களுக்கான வாழ்வாதாரத்துக்கான குடும்ப அட்டை, இருளர் சமுதாயம் என்பதற்கான ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாக சார் ஆட்சியர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com