தோட்டக்கலைத் துறை: நுண்ணீர் பாசனம் அமைக்க ரூ.9.69 கோடி மானிய இலக்கு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் நுண்ணீர் பாசனம் அமைப்பதற்கு ரூ. 9.69 கோடி மானியம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் நுண்ணீர் பாசனம் அமைப்பதற்கு ரூ. 9.69 கோடி மானியம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது. 
இதில், சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் மூலம் தோட்டக்களைப் பயிர்களான, பழப்பயிர்கள், காய்கறிகள், மலர்கள், நறுமணப் பயிர்களில் குறைந்த அளவு தண்ணீரைக்கொண்டு அதிக பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. 
இதன்மூலம், நீரை சிக்கனப்படுத்துவதுடன், அதிக விளைச்சல், விளை பொருள் தரத்தை மேம்படுத்த நுண்ணீர் பாசனம் பயன்படுகிறது. இப்பாசனத்தில், செடிகளின் வளர்ச்சி சீராக இருப்பதுடன் மகசூல் அறுவடை ஒரே நேரத்தில் வரும் என்பதால் விவசாயத்தில் இதன் தேவை அவசியமாகிறது. 
மேலும், சொட்டு நீர் பாசனம் அமைப்பதன் மூலம், உரத்துக்கான செலவும் குறைவதுடன் களைகளை கட்டுப்படுத்தவும், வேலையாள்கள் செலவினத்தை குறைத்து, கூடுதல் பயனடைய முடிகிறது. 
இத்திட்டத்தில், சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 5 ஹெக்டேருக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. 
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், வயல் வரைபடம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு, சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று, மண், நீர் மாதிரி அறிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மூலமோ அல்லது விவசாயிகள் தாங்களாகவே இணையதள சேவை மூலமாக, ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ர்ழ்ற்ண்ப்ற்ன்ழ்ங்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய்//ட்ர்ழ்ற்ண்//ம்ண்ம்ண்ள் என்ற முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம். நுண்ணீர் பாசன நிறுவனங்களை விவசாயிகளே தேர்வு செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. 
விவசாயத்தில் நிலையான வளர்ச்சிக்கும், வருமானத்துக்கும் தோட்டக்கலை பயிர்கள் விவசாயிகளுக்கு பெரிதும் கை கொடுத்து வருகிறது. அதன்படி, நிகாழாண்டில் ரூ. 9.69 கோடி மானியம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசின் திட்டத்தை பயன்படுத்தி தோட்டக்கலை மூலம் விவசாயிகளின் கூடுதல் பலன் பெற முன்வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com