வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை சரிவு

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி அங்காடிக்கு ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால், அவரை, தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட காய்களின் விலை சரிந்துள்ளது. இதனால், பொதுமக்கள் அதிகமான அளவில் காய்களை வாங்கிச் செல்கின்றனர். 
தற்போது ராஜாஜி மொத்த காய்கறி அங்காடிக்கு வந்துள்ள அவரை, பீன்ஸ், உருளைக்கிழங்கு, பீட்ரூட், சௌசௌ ஆகிய காய்கள் கிலோவுக்கு ரூ. 20 ஆக விற்பனை செய்யப்படுகின்றன.
அதுபோல், பீன்ஸ் ரூ. 15, தக்காளி ரூ. 10, கருணைக்கிழங்கு, கேரட், பச்சைமிளகாய், வள்ளிக்கிழங்கு, வெண்டை ஆகியவை தலா ரூ. 30-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
அதிகபட்சமாக முருங்கை விலை ரூ. 120 ஆக விற்பனையாகிறது. மேலும், சாம்பார் வெங்காயம் ரூ. 60-70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம், பிடிகருணை, இஞ்சி கிலோ ரூ. 40-க்கும், மொச்சை ரூ. 40-50-க்கும் விற்பனை செய்யப்
பட்டன. கடந்த வாரத்தில் விற்பனை செய்யப்பட்ட அனைத்துக் காய்கறிகளும் ரூ. 10 எனும் அளவில் விலை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ராஜாஜி காய்கறி அங்காடி சங்கத்தின் தலைவர் மோகன் கூறுகையில், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய பகுதிகளிலிருந்து காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. அவரை, கத்தரி, வெண்டை, முள்ளங்கி உள்ளிட்ட காய்கள், காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள வில்லிவாக்கம், கதிர்பூர், வையாவூர், வாத்தியூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரத்து அதிகம் காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் ஆர்வமாக காய்கறிகளை வாங்க வந்தவண்ணம் உள்ளனர்.
இருப்பினும், வியாபாரிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் கடந்த சில நாள்களாக விற்பனை மந்தமாக இருந்தது. 
தற்போது, பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டதால், மொச்சை, பரங்கிக்காய், சிறுவள்ளி உள்ளிட்ட காய்கள் அதிகளவில் விற்பனையாகின்றன. மேலும், வரத்தும் அதிகரித்துள்ளது. அதுபோல், விலையிலும் அடுத்த சில நாள்களுக்கு ஏற்ற இறக்கம் இருக்கும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com