பள்ளி மாணவர்களுக்கு மனநல உளவியல் பயிற்சி

பள்ளி மாணவர்களுக்கு தற்கொலை தடுப்பு மற்றும் போதைப் பழக்க தடுப்பு முறைகள் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில்  நடைபெற்றது. 

பள்ளி மாணவர்களுக்கு தற்கொலை தடுப்பு மற்றும் போதைப் பழக்க தடுப்பு முறைகள் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில்  நடைபெற்றது. 
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனமும், மாவட்டக் கல்வித் துறையும் இணைந்து நடத்திய முகாமுக்கு, மாவட்டக் கல்வி அலுவலர் ரமேஷ் தலைமை வகித்தார். முகாமில், ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் மதன்மோகன்கோயல் பேசுகையில்,  தற்போதைய சமூக கலாசார சூழலில் பள்ளி மாணவர்கள் தங்களது கற்கும் திறனிலும்,  ஆளுமைத் திறனிலும் பின்தங்கி காணப்படுகின்றனர்.  பல்வேறு காரணங்களால் மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி, காலப்போக்கில் தற்கொலை செய்து கொள்ளும் சூழலுக்கு உள்ளாகின்றனர். இதிலிருந்து மாணவர்களைக் காப்பாற்ற ஆசிரியர்கள் மாணவர்களிடம் நெருங்கிப் பழகி, நட்பு பாராட்டி, அவர்களின் ஆளுமைத் திறனை வளர்க்க வேண்டும் என்றார். 
 முகாமில் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவர் சுரேந்திரன்,  ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தின் உளவியல் துறை பேராசிரியர்  சுரேஷ்குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.  முகாமில் மாவட்டத்தில் உள்ள 100 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 520 மாணவர்கள், 100 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com