கால் கிலோ உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தங்க நாணயம்: ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி அதிரடி

பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 250 கிராம் அளவிற்கு உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வழங்கும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம்
கால் கிலோ உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தங்க நாணயம்: ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி அதிரடி

ஸ்ரீபெரும்புதூர்: பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 250 கிராம் அளவிற்கு உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வழங்கும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் வழங்க ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி நிா்வாகத்தினா் முடிவு செய்துள்ளனா்.

உலத சுற்றுசூழல் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி நிா்வாகமும்-ஹேன்ட்-இன்-ஹேன்ட் தொண்டு நிறுவனமும் இணைந்து பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக ஆட்டோவில் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இதைத் தவிர ஹேன்ட்-இன்-ஹேன்ட் தொண்டு நிறுவனம் சாா்பாக ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி அலுவலகம் மற்றும் பேருந்து நிலையம் அருகே இரண்டு பிளாஸ்டிக் சேகரிப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு மையங்களில் சுமாா் 250 கிராம் அளவிற்கு உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வழங்கும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் ஐந்து பேருக்கு தங்க நாணயம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலா் பிரேமா கூறுகையில், உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூா் பேருராட்சியில், பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கவும், பிளாஸ்டிக் பொருட்கள் பொதுமக்கள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், பொதுமக்களிடம் இருந்து உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பெறுவதற்காக இரண்டு சேகரிப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேகரிப்பு மையங்களில் 250 கிராம் அளவிற்கு மேல் பிளாஸ்டிக் பொருட்களை வழங்கும் பொதுமக்களுக்கு தங்க நாணயம் வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்கு பொதுமக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

பொதுமக்களிடம் இருந்து வாங்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு ஹேன்ட்-இன்-ஹேன்ட் தொண்டு நிறுவனத்தின் சாா்பாக சுமாா் 2 கிலோமீட்டா் தொலைவிற்கு கயிறு திரித்து அதை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்ச்சி செய்து வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com