மூடிய டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க முயற்சி: பொதுமக்கள் சாலை மறியல்

காஞ்சிபுரத்தில் மூடிய டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க முயற்சி செய்ததால் பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மூடிய டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க முயற்சி: பொதுமக்கள் சாலை மறியல்

காஞ்சிபுரத்தில் மூடிய டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க முயற்சி செய்ததால் பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 
காஞ்சிபுரம் பழைய ரயில்வே சாலையில் அரசு டாஸ்மாக் மதுக் கடை செயல்பட்டு வந்தது. இக்கடையால், பெண்கள், மாணவர்கள் , வியாபாரிகள் உள்ளிட்டோர் பாதிப்புக்குள்ளாகினர். இதன்காரணமாக, இக்கடையை மூடவேண்டும் என கோரிக்கை விடுத்து, பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இதுகுறித்து ஆட்சியர் உள்ளிட்டோரிடம் மனு அளித்து வந்தனர். அத்துடன், மதுக்கடையை மூடும் வரை போராட்டம் நடத்துவோம் எனவும் அறிவித்திருந்தனர். இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த இந்த மதுக்கடையை மூட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை அதிரடியாக உத்தரவிட்டார். மதுக்கடையும் மூடப்பட்டது. ஆனால், புதன்கிழமை வழக்கம் போல் கடையை மீண்டும் திறக்கும் முயற்சியாக மதுக்கடையின் பார்' திறக்கப்பட்டு, மதுபானம் விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதையறிந்து அவ்விடத்துக்கு வந்த அப்பகுதியினர், நிரந்தரமாக மதுக்கடையை மூடவேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். ஆனால், தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். 
நிரந்தரமாக அப்பகுதியில் டாஸ்மாக் கடை மூடப்படும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். எனவே, மீண்டும் இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்படாது என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, ஆட்சியருக்கு நன்றி தெரிவித்து, அனைவரும் கலைந்து சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com