சென்னை-செங்கல்பட்டு பிரிவில் பொறியியல் பணி: ரயில் சேவையில் நாளை மாற்றம்

சென்னை-செங்கல்பட்டு பிரிவில், வண்டலூருக்கும் கூடுவாஞ்சேரிக்கும் இடையே பொறியியல் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதை அடுத்து ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை

சென்னை-செங்கல்பட்டு பிரிவில், வண்டலூருக்கும் கூடுவாஞ்சேரிக்கும் இடையே பொறியியல் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதை அடுத்து ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 24) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
ஞாயிற்றுக்கிழமை முழுமையாக ரத்தாகும் ரயில்கள்: மேல்மருவத்தூர்-விழுப்புரம் எம்.இ.எம்.யூ. பயணிகள் ரயில், விழுப்புரம்-மேல்மருவத்தூர் எம்.இ.எம்.யூ. பயணிகள் ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
பகுதி ரத்தாகும் ரயில்கள்: செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு காலை 8.25, 8.45, 9.40, 10.50, முற்பகல் 11.50, நண்பகல் 12.15, பிற்பகல் 1, 1.50, 2.25, 3.15, 3.40, மாலை 4.35, 5, 5.30, 6.05, 6.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகின்றன. இந்த ரயில்கள் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும்.
திருமால்பூர்-சென்னை கடற்கரைக்கு காலை 8, 10.25, மதியம் 1.45, மாலை 5.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் திருமால்பூர்-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்கள் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும்.
மேல்மருவத்தூர்-சென்னை கடற்கரைக்கு பிற்பகல் 3.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் மேல்மருவத்தூர்-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமை தாமதமாக எழும்பூருக்கு வந்தடையும் விரைவு ரயில்கள்: செந்தூர் எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய விரைவு ரயில்கள் சென்னை எழும்பூருக்கு ஒரு மணி நேரம் 10 நிமிடம் தாமதமாக வந்து சேரும். அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து ஜூன் 24-ஆம் தேதி புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஆகியவை 15 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை தாமதமாகப் புறப்படும்.
இதுதவிர, காச்சிகூடா எக்ஸ்பிரஸ், காக்கிநாடா போர்ட் சர்க்கார் எக்ஸ்பிரஸ் ஆகியவை 3 மணி நேரம் வரை தாமதமாக செங்கல்பட்டில் இருந்து புறப்படும்.
திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரவேண்டிய சோழன் எக்ஸ்பிரஸ் காட்டாங்குளத்தூரில் சிறிதுநேரம் நின்று, 2 மணி நேரம் தாமதமாக எழும்பூரை வந்தடையும். இத்தகவலை தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பு மூலம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com