விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மக்கள் போராட்டத்தைச் சிதறடிக்கும் வகையில் துப்பாக்கிச்சூடு நடத்தி, 13 பேரை தமிழக அரசு படுகொலை செய்ததாகக் குற்றம்சாட்டி, அதைக் கண்டித்து காஞ்சி தெற்கு மாவட்ட விடுதலைச்

தூத்துக்குடி மக்கள் போராட்டத்தைச் சிதறடிக்கும் வகையில் துப்பாக்கிச்சூடு நடத்தி, 13 பேரை தமிழக அரசு படுகொலை செய்ததாகக் குற்றம்சாட்டி, அதைக் கண்டித்து காஞ்சி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைக் கட்சி சார்பாக மதுராந்தகம் தேரடி வீதியில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர் சூ.க.ஆதவன் தலைமை வகித்தார். மா.அப்பாதுரை வரவேற்றார். 
இந்நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான துரை ரவிக்குமார், ஈழத் தமிழன், தி.வா.எழிலரசு, தமிழினி, உதயகுமார், பார்த்திபன், அன்புச் செல்வன், கதிர்வாணன், முகிலன், தயாநிதி, விடுதலைச் செல்வன், சாரங்கம் உள்பட 500க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்; கொடூரமான மக்கள் படுகொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்; ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி, மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்; சூணாம்பேடு அரசு ஊழியர் சி.சிற்றரசு காவல் நிலையத்தில் கொல்லப்பட்டதற்கு நீதி வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முடிவில், கட்சி நிர்வாகி லிங்கேஸ்வரன் நன்றி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com