நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு: ஆட்சியரிடம் பாஜக புகார் 

நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெற்று வரும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் பாஜக சார்பில்

நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெற்று வரும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் பாஜக சார்பில் திங்கள்கிழமை புகார் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக பாஜக மாநிலக் குழு உறுப்பினர் பலராமன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் நிலையங்களில், 40 கிலோ மூட்டை கொள்முதல் செய்வதில் கூடுதலாக எடை வைத்து திருடப்படுகிறது.
இதில், ஒவ்வொரு 40 கிலோ மூட்டைக்கும் கொள்முதல் நிலைய அலுவலர்கள் மூலம் ரூ.50 வீதம் கமிஷன் பெறப்படுகிறது. விவசாயிகள் தவிர்த்து வியாபாரிகளிடம் நெல் மூட்டைகள் பெற்று விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டதுபோல் முறைகேடாகக் கணக்கு எழுதுகின்றனர். அதோடு, ஒவ்வொரு 40 கிலோ மூட்டைக்கும் ரூ. 75 வீதம் நெல் கொள்முதல் நிலைய அனைத்து அலுவலர்களும் கமிஷன் பார்க்கிறார்கள். ஒவ்வொரு விவசாயியிடமிருந்தும் மாதிரி நெல்லாக 30 கிலோ வரை எடுக்கப்படுகிறது. 
எனவே இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் ஆய்வு செய்வதுடன், ஒவ்வொரு விவசாயியிடமும் இதுகுறித்து நேரடி விசாரணை செய்து உண்மைநிலையைக் கண்டறிந்து முறைகேடுகளில் ஈடுபடும் அலுவலர்கள், மாவட்ட, மண்டல மேலாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com