'சங்க கால உறவு முறையினை நிகழ்காலத்தினர் பின்பற்ற வேண்டும்'

சங்க கால உறவு முறையினை நிகழ்காலத்தினர் பின்பற்ற முன்வர வேண்டும் என பாரதி மகளிர் கல்லூரி துணை முதல்வர் பூபாலன் பேசினார்.

சங்க கால உறவு முறையினை நிகழ்காலத்தினர் பின்பற்ற முன்வர வேண்டும் என பாரதி மகளிர் கல்லூரி துணை முதல்வர் பூபாலன் பேசினார்.
காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள ஸ்ரீ சங்கரா பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை சார்பில் புதன்கிழமை 'சங்க இலக்கியம் உணர்த்தும் சமூக உறவுகள்' என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் தோ.வேணுகோபால், கலை, மானிடவியல் துறை புலத் தலைவர் சிவராமகிருஷ்ண பிசிபாடி ஆகியோர் கருத்தரங்கை தொடங்கிவைத்து வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக, தமிழ்த் துறை தலைவர் அமல்ராஜ் வரவேற்றார். சென்னை காயிதே மில்லத் மகளிர் கல்லூரிப் பேராசிரியர் க.அ. ஜோதிராணி, ஆரணி பாரதி மகளிர் கல்லூரி துணை முதல்வர் ஆ. பூபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர். 
கருத்தரங்கில் பாரதி மகளிர் கல்லூரி துணை முதல்வர் பூபாலன் பேசியதாவது: 
மக்கள் தற்போது தங்களது உறவுகள் தொடர்பான பண்பாட்டை மறந்து வருகின்றனர். அத்துடன், இதற்கு வேறு விதமான கலாசார, நாகரீகத்தை கடைப்பிடிக்க முயல்வதே காரணமாக உள்ளது. இதனால், உறவுகளின் பிணைப்பை இழந்து வருகின்றனர். 
இந்த சூழலில், நாம் சங்க கால உறவு முறைகள் கடைப்பிடித்து கலாசார மாண்பினை உற்று நோக்க வேண்டும். அதன்மூலம், உறவுகளின் பகிர்வு, பாசத்தை உணர்த்தும் விஷயங்களை கடைப்பிடிக்க முயல வேண்டும். 
மேலும், சங்க கால மக்களின் உயர்திணை, அஃறிணை மீது வேறுபாடின்றி அன்பு செலுத்தியதை நினைவு கூறுவதோடு, அதனை நிகழ்காலத்தினர் பின்பற்ற முயலவேண்டும். இதனை தற்போதைய இளைஞர்களால் தான் மாற்ற முடியும் என்றார் அவர். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.
இதில், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com