ஓய்வூதியதாரர்கள் ஏப்.1 முதல் நேர்காணலுக்கு அழைப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓய்வூதியம் பெற்று வரும் அரசு ஊழியர்கள் அனைவரும் வரும் ஏப்ரல் 1 முதல் மாவட்ட கருவூலங்களில் நேர்காணலுக்கு வர வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓய்வூதியம் பெற்று வரும் அரசு ஊழியர்கள் அனைவரும் வரும் ஏப்ரல் 1 முதல் மாவட்ட கருவூலங்களில் நேர்காணலுக்கு வர வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோர் தாங்கள் ஓய்வூதியம் பெறும் மாவட்டக் கருவூலம், சார் கருவூலங்களில் நிகழாண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூன் மாதத்துக்குள் நேர்காணல் செய்து கொள்ள வேலைநாள்களில் உரிய கருவூல அலுவலகத்துக்கு வரவேண்டும்.
அவ்வாறு வரும் போது, பல்வேறு ஆவணங்களை கொண்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நேரில் வருபவர்கள்: ஆதார் அட்டை, ஓய்வூதிய புத்தகம், நடைமுறையிலுள்ள சேமிப்புக் கணக்கு- வங்கிபற்று வரவு புத்தக எண், வருமானவரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை ஆகிய நகல்களுடன் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் மறுமணம் புரியா சான்றுடன் வரவேண்டும். 
நேரில் வர இயலாதவர்கள்: கருவூல அலுவலகங்களுக்கு நேரில் வரமுடியாத ஓய்வூதியதாரர்கள் ஜீவன் பிரமான் போர்டல் திட்டத்தின்கீழ், நேர்காணல் செய்யலாம். 
இச்சேவை இ-சேவை மையங்களிலும் வழங்கப்படுகிறது. எனவே, இ-சேவை மையங்களில் டிஜிட்டல் லைஃப் சான்றிதழ் பெறுவதன் மூலம் நேர்காணல் செய்திடலாம். இதற்கு, ஓய்வூதியர் தனது ஓய்வூதிய கொடுவை எண், வங்கி கணக்கு எண், ஆதார் எண், செல்லிடப்பேசி எண் ஆகிய விவரங்களை இ-சேவை மையங்களில் தெரிவித்தால், அவர்களுக்கு மின்னணு வாழ்வு சான்றிதழ் அச்சிட்டு வழங்கப்படும்.
வாழ்வு சான்றிதழ் அளித்தல்: நேரில் வர இயலாத ஓய்வூதிதாரர்கள் வாழ்வு சான்று உரிய படிவத்தில் குறிப்பிட்ட 5 ஆவணங்களின் நகல்களுடன் அனுப்பி வைக்கவேண்டும். அத்துடன், வாழ்வுச் சான்றிழை ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள கிளை மேலாளர், அரசிதழ் பதிவு பெற்ற மாநில, மத்திய அரசு அலுவலர், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் அல்லது வருவாய் அலுவலர் ஆகியோரிடம் சான்றொப்பம் பெற்று அனுப்பி வைக்க வேண்டும். மேலும், உரிய ஆவணங்களுடன் மறுமணம் புரியாத சான்றை அளிக்க வேண்டும்.
வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியதாரர்கள்: வெளிநாட்டிலுள்ள மாஜிஸ்திரேட், நோட்டரி, வங்கி மேலாளர் அல்லது இந்திய தூதரக அலுவலரிடம் வாழ்வுச் சான்று பெற்று சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் அல்லது ஜீவன் பிராமன் போர்டல் மூலம் வாழ்வு சான்று வழங்கிடலாம். 
ஓய்வூதியதாரர்கள் தற்போதைய இருப்பிட முகவரி, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களையும் அளிக்க வேண்டும்.
ஓய்வூதியம் நிறுத்தம்: ஓய்வூதியர்கள் வரும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரை நேர்காணலுக்கு வரத் தவறினாலோ அல்லது சான்றொப்பம் செய்யப்பட்ட வாழ்வுச் சான்றினை அனுப்பத் தவறினாலோ, ஓய்வூதியம் வரும் 2018-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் முதல் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இணையதளமுகவரி: சான்றுகளுக்கான மாதிரிப் படிவத்தை www.tn.gov.in/karuvoolam  என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 044-27238321 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். மேலும், www.jeevanpramaanportal.gov. in என்ற இணையதள முகவரியிலும் தகவல் பெறலாம்.
ஓய்வூதியர் அடையாள அட்டை: ஓய்வூதியதாரருக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து இதுநாள் வரை வழங்காத ஓய்வூதியர்கள், நேர்காணலுக்கு வரும்போது அப்படிவத்தினைக் கருவூலத்தில் பெற்று பூர்த்தி செய்து, அப்படிவத்துடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தினை இணைத்து வழங்க வேண்டும்.
பொதுத்துறை வங்கிகளின் மூலம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் தமிழ்நாடு மின்வாரியம், ரயில்வே, அஞ்சல் துறை, தொழிலாளர் வைப்பு நிதித் திட்டம், மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், உள்ளாட்சி மன்ற ஓய்வூதியர்கள் ஆகியோருக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com