ராஜீவ் காந்தியுடன் உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது அவருக்குப் பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டு உயிர்நீத்த

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது அவருக்குப் பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டு உயிர்நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள நினைவுத் தூணுக்கு எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
கடந்த 1991ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்காக ஸ்ரீபெரும்புதூருக்கு வந்த ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலில், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல் துறையைச் சேர்ந்த 9 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
பணியில் இருந்தபோது உயிர்நீத்த அந்தக் காவலர்களை கௌரவிக்கும் வகையில், ஸ்ரீபெரும்புதுôர் காவல் நிலைய வளாகத்தில் நினைவுத் துôண் கட்டப்பட்டது. அங்கு, அந்தக் காவலர்களின் பெயர்கள் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், உயிர்நீத்த போலீஸாரின் 27ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, ஏடிஎஸ்பி சந்திரசேகரன், டிஎஸ்பி பஞ்சாட்சரம், ஸ்ரீபெரும்புதூர் ஆய்வாளர் நடராஜ், ஓய்வு பெற்ற காவலர் சங்க மாநில துணைத் தலைவர் பாரதிதாசன், மாநிலச் செயலாளர் கார்மேகம், கௌரவத் தலைவர் சிவசுப்ரமணியன் மற்றும் ஏராளமான போலீஸார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில், இறந்த காவலர்களின் குடும்பத்தினரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக இந்த நிகழச்சியில் கலந்து கொண்ட அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி தலைமையில் தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com