அம்மா திட்ட முகாமில் 18 பேருக்கு நலத்திட்ட உதவி

வல்லக்கோட்டை ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் ஊராட்சியைச் சேர்ந்த 18 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வல்லக்கோட்டை ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் ஊராட்சியைச் சேர்ந்த 18 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
 மக்களைத் தேடி வருவாய்த்துறை எனும் அம்மா திட்ட முகாம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்குட்பட்ட வல்லக்கோட்டை ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சமூகப் பாதுகாப்புத்துறை தனி வட்டாட்சியர் கவிதா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமிற்கு, வட்ட வழங்கல் அலுவலர் கோபி, வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், பொடவூர் கிராம நிர்வாக அலுவலர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 இதில் ஸ்ரீபெரும்புதூர் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பழனி கலந்து கொண்டு ஊராட்சியைச் சேர்ந்த 14 பயனாளிகளுக்கு மின்னனு குடும்ப அட்டை, 4 பேருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
 இதில் முதியோர் உதவித்தொகை, பட்டா உட்பிரிவு, குடும்ப அட்டையில் பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக சுமார் 20-க்கும் மேற்பட்டோர் மனு வழங்கினர். முகாமில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியச் செயலாளர் எறையூர் முனுசாமி, முன்னாள் ஒன்றியச் செயலாளர் போந்தூர் செந்தில்ராஜன், ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் ஒன்றியக் குழுவின் தலைவர் சிவகுமார், வளர்புரம் கூட்டுறவு சங்கத் தலைவர் குமார், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் பாபு, வல்லக்கோட்டை ராஜா உள்ளிட்ட அதிமுகவினர் பொதுமக்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com