ஒரு மாதத்துக்குள் காப்பகங்கள், விடுதிகளை பதிவு செய்ய வேண்டும்: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

ஒரு மாதத்துக்குள் காப்பகங்கள், விடுதிகள் அனைத்தும் பதிவு செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா அறிவுறுத்தியுள்ளார்.


ஒரு மாதத்துக்குள் காப்பகங்கள், விடுதிகள் அனைத்தும் பதிவு செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா அறிவுறுத்தியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு பணிபுரியும் பெண்களுக்கான மகளிர் விடுதிகள், தனியார் நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் மகளிர் விடுதிகள், குழந்தைகள் காப்பகங்கள் அனைத்தும் குழந்தைகள், பெண்கள், விடுதி- காப்பகங்கள் சட்டம், விதிமுறைகள் 2014-15 இன் கீழ், சமூக நலத்துறையில் பதிவு செய்ய வேண்டும். அதுபோல், அனைத்து முதியோர் இல்லங்களும் முதியோர் பராமரிப்பு நலச் சட்டம் 2009-இன் கீழ் பதிவு செய்திடல் வேண்டும். இதற்காக, காப்பகங்கள், விடுதிகள் உள்ளிட்டவற்றின் பதிவு சான்றிதழ், அமைப்புச் அனுமதிச் சான்றிதழ், நிர்வாகக் குழு விபரம், காப்பகப் பணியாளர்கள், தங்கியிருப்போர் விவரங்கள், கட்டட அனுமதிச் சான்றிதழ், கட்டட வடிவமைப்புச் சான்றிதழ், தணிக்கை விவரம் என மொத்தம் 16 வகையான சான்று ஆவணங்களை பதிவு செய்திட விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். உரிய ஆவணங்களுடன், மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், எண். 43, காந்தி நகர் 2-ஆவது தெரு, ஐஓபி வங்கி அருகில், செவிலிமேடு, காஞ்சிபுரம்- 631501 எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த அறிவிப்பு வெளியான அடுத்த ஒரு மாத காலத்துக்குள் கட்டாயம் பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பதிவு செய்யத் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட காப்பகங்கள், விடுதிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com