திருப்போரூர் கந்தசாமி கோயிலில் சூரசம்ஹாரம்

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை சூரசம்ஹாரம் நடைபெற்றது. 
திருப்போரூர்  கந்தசாமி  கோயிலில்  நடைபெற்ற  சூரசம்ஹார விழா.
திருப்போரூர்  கந்தசாமி  கோயிலில்  நடைபெற்ற  சூரசம்ஹார விழா.

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை சூரசம்ஹாரம் நடைபெற்றது. 
இக்கோயிலில் நவம்பர் 8-ஆம் தேதி கந்த சஷ்டி பெருவிழா தொடங்கி நடைபெற்றது. முதல் நாளான வியாழக்கிழமை (நவம்பர் 8) மாலை முருகர் கிளி வாகனத்திலும், வெள்ளிக்கிழமை மாலை ஆட்டுக்கிடா வாகனத்திலும், 3-ஆவது நாளான சனிக்கிழமை புருஷாமிருக வாகனத்திலும் முருகப்பெருமான் திருவீதி உலா வந்தார். 4-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை பல்லக்கு உற்சவமும், பூத வாகனத்திலும், திங்கள்கிழமை வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதியுலா நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து 6-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை மாலை சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் முருகப்பெருமான் தங்கவேல் கொண்டு சூரபத்மனின் ஆணவத்தை அழிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு சூரனையும் அழித்து கடைசியில் மாமரத்தில் மறைந்திருந்த சூரபத்மனை அழித்து மயிலாகவும், சேவல் கொடியாகும் தன்னருகேயே வைத்துக் கொண்டிருக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, முருகப்பெருமான் தங்க வாகனத்தில் இரவு வீதிஉலா நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன், தக்கார் மற்றும் உதவி ஆணையர் ரமணி, மேலாளர் வெற்றி ,
கோயில் சிவாச்சாரியார்கள், பணியாளர்கள் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
செங்கல்பட்டில்...
செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள கோயில்களில் சூரசம்ஹாரம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. செங்கல்பட்டு பெரியநத்தம் கைலாசநாதர் கோயில், வ.உ.சி.தெரு ஏகாம்பரேஸ்வரர் கோயில், அண்ணாநகர் எல்லையம்மன் கோயில், ரத்தினவிநாயகர் கோயில், ஆத்தூர் முக்தீஸ்வரர் கோயில், மேட்டுத் தெரு செங்கழுநீர் விநாயகர் கோயில், பெரியநத்தம் கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 
பெரியநத்தம் கைலாசநாதர் கோயிலிலும் சூரம்ஹாரம் நடைபெற்றது. இதையடுத்து அங்கு புதன்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. செங்கல்பட்டு சக்திவிநாயகர் கோயிலிலும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் செந்தல்குமார், உற்வச கமிட்டி நிர்வாகிகள் ஸ்ரீதர், முருகன், ரமேஷ்குமார், தனகோட்டி, செல்வகுமார், பாஸ்கர், ரவிசங்கர், சரவணன் மற்றும் பெரியநத்தம் பகுதி மக்கள் செய்திருந்தனர்.
விழாவில் டிஎஸ்பி கந்தன், அதிமுக நகர செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர். 
சூரசம்ஹாரம் நடைபெற்ற கோயில்களில் சூரபத்மனை அழிக்கும் நிகழ்ச்சியில் வீரபாகுவும் போர்களத்தில் நிற்க, முருகர் தங்கவேல் கொண்டு கஜமுகாசூரன், தாரகா சூரன் உள்ளிட்ட ஒவ்வொரு சூரனையும் அழிக்கும் நிகழ்ச்சியும், கடைசியில் மாமரத்தை பிளந்து சூரபத்மனின் ஆணவத்தை அழிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 
இதையடுத்து உற்சவர் வீதியுலா நடைபெற்றது. இதனை திரளான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com