2,483 மாணவர்களுக்கு மிதிவண்டிகள்: அமைச்சர் பா.பெஞ்சமின் வழங்கினார்

பள்ளி மாணவ, மாணவிகள் 2,483 பேருக்கு அமைச்சர் பா.பெஞ்சமின் மிதிவண்டிகளை வழங்கினார்.
2,483 மாணவர்களுக்கு மிதிவண்டிகள்: அமைச்சர் பா.பெஞ்சமின் வழங்கினார்


பள்ளி மாணவ, மாணவிகள் 2,483 பேருக்கு அமைச்சர் பா.பெஞ்சமின் மிதிவண்டிகளை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி, படப்பை ஆண்கள், பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி, சோமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி, குன்றத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய 5 பள்ளிகளைச் சேர்ந்த 2,483 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை அந்தந்த பள்ளி வளாகங்களில் நடைபெற்ற விழாவில் ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின் வெள்ளிக்கிழமை வழங்கினார். இதைத் தொடர்ந்து, அவர் பேசியது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கல்வித் துறைக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினார். இதற்காக, அரசின் நிதி ஒதுக்கீட்டில் ஐந்தில் ஒரு பங்கை கல்வித் துறைக்கு ஒதுக்கி, உயர்ந்த இடத்துக்கு உயர்த்தினார். அதன்படி, ரூ.1 கோடியே 64 லட்சத்து 461 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு மேலும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி தரம் உயர்த்தப்பட்டு வருகிறது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையாக கல்வியறிவு பெறும் வகையில் தரமான கல்வி கற்பிக்கக் கூடிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதோடு, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சீருடைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் வருகை பயோ-மெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும் புதிய திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்களின் வருகையையும், அவர்கள் வெளியே செல்வதையும் பெற்றோர்கள் அறிய முடிகிறது. இதன் மூலம் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுகிறது. தொடக்கப் பள்ளி முதல் மேல்படிப்பு வரை தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, அவர்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது.
அரசுப் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து வகையான அடிப்படை வசதிகளும், கல்வி கற்பதற்கான ஆய்வகங்கள், நூலகங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்காக, இலவச மிதிவண்டி மட்டுமின்றி மடிக்கணினி முதல் மேலும் 14 வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 
மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி பயில்வதற்கு ஏற்ற வகையில் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கு அரசுப் பள்ளிகளில் பயிற்சி பெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம், மாணவர்கள் வெற்றி பெறக்கூடிய வகையில், பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் அரசின் இத்திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு நன்றாகப் படித்து இந்த தேசத்திற்கு தூணாக இருக்கும் வகையில் கல்வி அறிவை பெறவேண்டும் என்றார் அவர். 
இவ்விழாவில், ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. ராமச்சந்திரன், எம்எல்ஏ மு.பழனி, மாவட்டவருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, சார்ஆட்சியர் சரவணன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் வாலாஜாபாத் பா.கணேசன், காஞ்சி பன்னீர்செல்வம், மைதிலி, முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, மாவட்டக் கல்வி அலுவலர்கள் மகேஸ்வரி, மதிவாணன், ஆசிரியர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
ஸ்ரீபெரும்புதூரில் 1,929 மாணவர்களுக்கு...
படப்பை, சோமங்கலம், குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள 5 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,929 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் பெஞ்சமின் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
குன்றத்தூர் ஒன்றியம், படப்பை மற்றும் குன்றத்தூர் பகுதிகளில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சோமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும், மதுரமங்கலம், பண்ருட்டி, மாத்தூர், ஸ்ரீபெரும்புதூர், தண்டலம், மொளச்சூர், தெரசாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள 8 அரசினர் மேல்நிலை பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மதிவண்டிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தந்த பள்ளி வளாகத்தில் இவ்விழா நடத்தப்பட்டது. 
படப்பை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு, ஸ்ரீபெரும்புதூர் எம்.பி.யான கே.என்.ராமச்சந்திரன், அத்தொகுதி எம்எல்ஏ கே.பழனி, அதிமுக மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊரக தொழில்த்துறை அமைச்சர் பெஞ்சமின் கலந்துக்கொண்டு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். 
சார் ஆட்சியர் சரவணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயராஜ், மாவட்டக் கல்வி அலுவலர் மதிவாணன், ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், சந்திரபாபு, குன்றத்தூர் ஒன்றியச் செயலாளர் எழிச்சூர் ராமச்சந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், அதிமுகவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
படப்பை ஆண்கள் பள்ளியில் 288 மாணவர்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 544, சோமங்கலம் பள்ளி மாணவர்கள் 405, குன்றத்தூர் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவர்கள் 692 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் என மொத்தம் 1,929 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com