கால்வாய்கள் இல்லாததால் தெருக்களில் தேங்கும் கழிவுநீர்

ஒரத்தூர் ஊராட்சியில் உள்ள பல பகுதிகளில் கழிவுநீர்க் கால்வாய் அமைக்கப்படாததால் தெருக்களில் கழிவு நீர் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கால்வாய்கள் இல்லாததால் தெருக்களில் தேங்கும் கழிவுநீர்

ஒரத்தூர் ஊராட்சியில் உள்ள பல பகுதிகளில் கழிவுநீர்க் கால்வாய் அமைக்கப்படாததால் தெருக்களில் கழிவு நீர் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்டது ஒரத்தூர் ஊராட்சி. இங்கு, ஒரத்தூர், நீலமங்கலம், வரதராஜபுரம், அம்மணம்பாக்கம், கீழக்காலனி ஆகிய பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரத்தூர் பகுதியில் உள்ள பஜனை கோயில் தெரு, பெருமாள் கோயில் தெரு, பெரிய தெரு, ஒத்தவாடைத் தெரு, சின்ன தெரு உள்ளிட்ட தெருக்களில் கழிவுநீர்க் கால்வாய்கள் அமைக்கப்படாமல் உள்ளன. இதனால், இப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரானது தெருக்களிலேயே தேங்கி நிற்கிறது. கழிவுநீர் தேங்கிய பகுதியிலேயே தெருக் குழாய்கள் உள்ளன. அதில் வரும் தண்ணீரை இப்பகுதி பொதுமக்கள் குடிநீராகப் பயன்படுத்தி வருவதாகவும், இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு, இப்பகுதி மக்கள் பலர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ஒரத்தூர் பகுதியில் உள்ள பல தெருக்களுக்கு கழிவுநீர்க் கால்வாய் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் தெருக்களிலேயே தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் எங்கள் பகுதியில் பலர் காய்ச்சல்களால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே எங்கள் பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் தேங்காமல் இருக்க அனைத்து தெருக்களுக்கும் கழிவுநீர்க் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறையினர் எங்கள் பகுதியில் மருத்துவ முகாம்களை நடத்த முன்வர வேண்டும் என்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com