புலிவாய் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம்

புலிவாய் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.
புலிவாய் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம்


புலிவாய் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் ஒன்றியத்துக்குட்பட்ட புலிவாய் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இதில், வட்டாட்சியர் அகிலாதேவி தலைமை வகித்தார். மண்டல தனி வட்டாட்சியர் கீதாலஷ்மி, வட்ட வழங்கல் அலுவலர் அண்ணாமலை ஆகியோர் மேற்பார்வையில் கிராமத்தினரிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. 15 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது. 15 மனுக்கள் துறை சார்ந்த அலுவலர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் கலந்துகொண்டு கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். வருவாய் அலுவலர் தமிழ்ச்செல்வன் நன்றியுரையாற்றினார். இதில் திரளான பொதுமக்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
நீலமங்கலம் கிராமத்தில்...
 மதுராந்தகத்தை அடுத்த நீலமங்கலம் கிராமத்தில் செய்யூர் வருவாய்த் துறையினர் சார்பாக அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செய்யூர் வட்ட வருவாய்த் துறையினர், நீலமங்கலம் கிராமத்தில் உள்ள மக்களின் நீண்ட காலக் கோரிக்கைகளான பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித் தொகை, ஸ்மார்ட் கார்டுகள், திருமண உதவித் தொகை, விதவை உதவித் தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவற்றை நிறைவேற்ற முடிவு செய்தனர். அதன்படி, செய்யூர் வட்டாட்சியர் வி.ரமா அந்த கிராமத்தில் அம்மா திட்ட முகாமை நடத்த ஏற்பாடு செய்தார்.
இந்த முகாமிற்கு செய்யூர் வட்ட வழங்கல் துறை அலுவலர் மா.தயாளன் தலைமை வகித்தார். முதுநிலை வருவாய் ஆய்வாளர் சரவணன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் நீலமங்கலம் வருவாய் ஆய்வாளர் தமிழழகன், கிராம நிர்வாக அதிகாரி அ.வசந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 44 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. அவற்றில் 14 மனுக்கள் ஏற்கப்பட்டன. உரிய முறையில் விண்ணப்பிக்காததால், 26 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 4 மனுக்கள் பல்வேறு துறைகளின் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. 
முகாமில், 9 பேருக்கு புதிய ஸ்மார்ட் கார்டுகளை வட்ட வழங்கல் அலுவலர் மா.தயாளன் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்யூர் வருவாய்த் துறையினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com