கல்யாண சீனிவாசப் பெருமாளுக்கு அன்னக்கூட உற்சவம்

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு மாகாண்யம் கல்யாண சீனிவாசப் பெருமாளுக்கு அன்னக்கூட உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு மாகாண்யம் கல்யாண சீனிவாசப் பெருமாளுக்கு அன்னக்கூட உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.
 ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மகாண்யம் கிராமத்தில் கல்யாண சீனிவாசப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாளுக்கு அன்னக்கூட உற்சவமும், அகண்ட தீபம் ஏற்றப்பட்டு கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற்றது. இதில் புரட்டாசி மாதம் மாலை அணிந்து விரதமிருந்த பக்தர்கள் அகண்ட தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். முரளிதர சுவாமிகள், கோயிலிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கினார்.
 இதையடுத்து, அவரது சீடர் பம்மல் பாலாஜி தலைமையில் கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. ஏராளமான நிவேதனப் பொருள்கள் கல்யாண சீனிவாசப் பெருமாளுக்கு அன்னக்கூடமாக சமர்ப்பிக்கப்பட்டு உலகம் முழுவதும் வாழும் உயிரினங்களுக்காக கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இந்த உற்சவத்தில், கன்னியாகுமரி, விருதுநகர், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், வள்ளியூர், தேனி, பெரியகுளம், குடியாத்தம், வேலூர், ஆரணி உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கல்யாண சீனிவாசப் பெருமாளைவழிபட்டனர்.
 இதனிடையே, ஸ்ரீபெரும்புதூர், சிங்கப்பெருமாள்கோவிலை அடுத்த தென்மேல்பாக்கம், குன்றத்தூரை அடுத்த கௌத்திபேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கல்யாண சீனிவாசப் பெருமாளுக்கு கோயிலுக்கு வந்தனர். அவ்வாறு வந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் குன்றத்தூர் ஒன்றியச் செயலாளர் மலைப்பட்டு பி.ராதாகிருஷ்ணன் மற்றும் விழாக் குழுவினர் சார்பாக அன்னதானம் செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com