மாலோலன் கல்லூரியில் சம்ஸ்கிருத விழா

மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சம்ஸ்கிருத துறை சார்பாக சம்ஸ்கிருத விழா நிறைவு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கிய மதுராந்தகம் அகோபில மடம் ஓரியண்டல் பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ரகுவீர பட்டாச்சாரி.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கிய மதுராந்தகம் அகோபில மடம் ஓரியண்டல் பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ரகுவீர பட்டாச்சாரி.

மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சம்ஸ்கிருத துறை சார்பாக சம்ஸ்கிருத விழா நிறைவு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
மதுராந்தகம் மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக சம்ஸ்கிருத விழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை நடைபெற்றது. தொடக்க நாள் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வி.சுபத்ரா தலைமை வகித்தார். சம்ஸ்கிருத துறைத் தலைவரும், கல்லூரி துணை முதல்வருமான திருமலை வரவேற்றார். 
இந்நிகழ்ச்சியில் மதுராந்தகம் சம்ஸ்கிருதக் கல்லூரி முதல்வர் எஸ்.வரதகோபாலன் கலந்து கொண்டு சம்ஸ்கிருத மொழியின் சிறப்பு, தமிழ்ச் சமூகத்தின் சிறப்பு' என்ற தலைப்பில் பேசினார். பேராசிரியர் எஸ்.ஸ்ரீதர், வேதாந்த தேசிகரின் பெருமைகள்' என்ற தலைப்பிலும், பேராசிரியர் லட்சுமிநரசிம்மன், மகாபாரதமும், சமூகத்தின் இன்றைய தேவையும்' என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
மதுராந்தகம் சம்ஸ்கிருதக் கல்லூரி பேராசிரியர் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு, பகவத் கீதையின் பெருமை மற்றும் சமூகத்தில் அவ்வேதத்தின் தேவை' குறித்தும், மதுராந்தகம் இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் டி.பி.வெங்கடபெருமாள், ராமாயணத்தின் பெருமைகள்' பற்றியும் பேசினர். மதுராந்தகம் அகோபில மடம் ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ரகுவீர பட்டாச்சாரி கலந்து கொண்டு ஆண்டாளும், திருப்பாவையும்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். 
சம்ஸ்கிருத மொழி சார்ந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன. கடந்த 5 நாள்களாக நடைபெற்ற சம்ஸ்கிருத விழா சனிக்கிழமை நிறைவு பெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி சம்ஸ்கிருத துறைத் தலைவர் எஸ்.திருமலை தலைமையில் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com