செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய பசுமை விநாயகர்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ரசாயன மாசு பாதிப்பு ஏதும் இல்லாத வகையில் பசுமை விநாயகர் சிலைகளை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட பசுமை விநாயகர் சிலைகள்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட பசுமை விநாயகர் சிலைகள்.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ரசாயன மாசு பாதிப்பு ஏதும் இல்லாத வகையில் பசுமை விநாயகர் சிலைகளை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பிளாஸ்டர் ஆப் பாரிஸ், களிமண் உள்ளிட்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், சுற்றுப்புற சுகாதாரத்துக்கு பாதிப்பு இல்லாத வகையில் வண்ணங்கள் தீட்டாமல், பசுமையான இலை, தழைகளைக் கொண்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் விநாயகர் சிலைகளை தயாரித்துள்ளனர்.
பல்வேறு வகையான வடிவில் பசுமை இலைகளைக் கொண்டு இந்த விநாயகர் சிலைகளை உருவாக்கியுள்ளனர். மருத்துவக் கல்லூரி முதல்வர் உஷா சதாசிவன், துணை முதல்வர் அனிதா அவர்களை ஆகியோர் மாணவர்களைப் பாராட்டினர். இந்த தழைகளைக் கொண்டு களிமண் போல் பசையாக்கி உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகள் செங்கல்பட்டு கல்லூரி, அரசு மருத்துவமனையில் வைத்து, புதன்கிழமை முதல் விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், இந்த நிதியைக் கொண்டு மருத்துவக் கல்லூரியில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளுக்கு வேலி அமைப்பதற்காக யாரிடமும் சென்று நிதி திரட்டாமல், இந்த விநாயகர் சிலை விற்பனைச் செய்யப்படுவதன் மூலம் கிடைக்கும் நிதியைக்கொண்டு வேலி அமைக்க உள்ளதாகத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com