மாசடைந்த பள்ளமொளச்சூர் தாமரைக்குளம் சீரமைக்கப்படுமா?

பராமரிப்பு இல்லாமல் மாசடைந்துள்ள பள்ளமொளச்சூர் தாமரைக்குளத்தை சீரமைக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாசடைந்து  காணப்படும்  பள்ளமொளச்சூர்  தாமரைக்குளம்.
மாசடைந்து காணப்படும் பள்ளமொளச்சூர் தாமரைக்குளம்.


பராமரிப்பு இல்லாமல் மாசடைந்துள்ள பள்ளமொளச்சூர் தாமரைக்குளத்தை சீரமைக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், மொளச்சூர் ஊராட்சிக்குள்பட்ட பள்ளமொளச்சூர் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் தாமரைக்குளம் உள்ளது. இக்குளத்து நீரை கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பகுதி பொதுமக்கள் குடிநீராகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்தக் குளம் தூர்வாரி சீரமைக்கப்படாததால், குளத்து நீர் தற்போது பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் மாசடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியது: கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த குளத்து நீரைத்தான் நாங்கள் குடிநீராகப் பயன்படுத்தி வந்தோம். தற்போது கூட எங்கள் பகுதியில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீர் வரவில்லை என்றால் இந்தக் குளத்து நீரைத்தான் குடிநீராகப் பயன்படுத்துகிறோம்.
அதேபோல், அருகில் உள்ள திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் இக்குளத்து நீரைப் பயன்படுத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாக இக்குளத்தை தூர்வாரி சீரமைக்க அதிகாரிகள் முன்வராததால் குளத்து நீர் மாசடைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் குளத்து நீரைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, வரும் மழைக் காலத்துக்குள் குளத்தைத் தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com