பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய, மாநில அரசுகள் நினைத்தால் கட்டுப்படுத்த முடியும்: இரா.முத்தரசன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகளால் கட்டுப்படுத்த முடியும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய, மாநில அரசுகள் நினைத்தால் கட்டுப்படுத்த முடியும்: இரா.முத்தரசன்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகளால் கட்டுப்படுத்த முடியும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம், இந்தியாவைப் பாதுகாப்போம்' எனும் பிரசார பேரியக்கத்தின் ஒரு பகுதியாக காஞ்சிபுரம், காந்தி சாலை பெரியார் திடலில் பிரசாரக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில், கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். அதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 
தமிழகத்தில் அரசு அதிகாரிகள் முதல் முதல்வர் வரை ஊழல் செய்கின்றனர். ஏன், ஊழல் இல்லாத அரசுத் துறைகளே இல்லை எனும் அளவுக்கு ஊழல் அதிகரித்துள்ளது. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றவருக்கும் கூட 14 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை அளிக்கப்பட்டது. ஆனால், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போதிய ஆதாரம் இல்லை என சிபிஐ தரப்பிலும் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரின் முடிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், ஆளுநரோ இந்த விவகாரத்தில் தாமதம் செய்து வருகிறார். இது வருத்தமளிக்கிறது. 
இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் தனிப்பட்ட முறையில் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தவும், அந்தந்த பகுதியில் குறிப்பிட்ட நாளில் சிலைகளைக் கரைக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. இதன் மூலம், ஹெச்.ராஜா போன்றோர் அவதூறு பேசுவதும், மதக் கலவரம் ஏற்படுவதற்கும் காரணமாக உள்ளனர். இதுதொடர்பாக, சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்குகிறது. இது கண்டனத்துக்குரியது. 
பிரதமர் மோடி அண்மையில் வாராணசியில் நன்றாகப் பேசியுள்ளார். ஆனால், அவை அனைத்தும் மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகளின் வரிவிதிப்பே முக்கிய காரணமாக உள்ளது. இதனை, மத்திய மாநில அரசுகள் நினைத்தால் கட்டுப்படுத்த முடியும். ஆனால், விலை உயர்வை வேடிக்கை பார்க்கவே செய்கின்றனர் என்றார் அவர்.
இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com