சித்தாமூரில் பொதுக்கழிப்பறை கட்டப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சித்தாமூரில் பொதுக் கழிவறை கட்டுமாறு அப்பகுதி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


சித்தாமூரில் பொதுக் கழிவறை கட்டுமாறு அப்பகுதி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்யூர் வட்டம், மதுராந்தகம்-சூனாம்பேடு நெடுஞ்சாலை, சோத்துப்பாக்கம்-செய்யூர் நெடுஞ்சாலை ஆகிய 4 வழிச்சாலையை ஒட்டி சித்தாமூர் நகரம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு அரசு வங்கிகளும், மின்சார வாரியம், தொலைபேசி சேவை மையம், அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. 
சூனாம்பேடு, கன்னிமங்கலம், தேவாதூர், ஒனம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சித்தாமூர் வழியாக மதுராந்தகம், புதுச்சேரி, மேல்மருவத்தூர், நுகும்பல், தொண்ணாடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் சென்று வர வேண்டியுள்ளது. இந்த கிராமங்களின் மையப்பகுதி நகரமாக சித்தாமூர் திகழ்கிறது. 
இங்கிருந்தும், வெளியூர்களில் இருந்தும் வந்து செல்லும் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் இயற்கை உபாதைகளைத் தீர்க்க இப்பகுதியில் கழிவறை வசதி இல்லை. சாலையோரம் மலம் கழிக்கக் கூடாது, தூய்மை இந்தியாவைப் பேணுவோம் என அரசு முழக்கமிட்டாலும், சுற்றுப்புற சுகாதாரத்தைப் பேணுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. குறிப்பாக, அரசு முக்கிய இடங்களில் கழிவறைகளை கட்டித் தரவில்லை. 
வெளியூர் செல்லும் பெண்கள் இயற்கை உபாதைகளோடு நீண்டதூரம் செல்வதால் சிறுநீரக நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 
இதனால் பெண்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாக நேரிடுகிறது. சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், சித்தாமூர் அனைத்து வியாபாரிகள் நலச் சங்கத்தினர் ஆகியோர் இக்குறைபாட்டை சரிசெய்யக் கோரி மாவட்ட நிர்வாகத்துக்கு நேரிலும், அஞ்சல்வழியிலும் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் இதுவரை அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சித்தாமூர் கூட்டுச் சாலையோரம் அனைவரும் பயன்படுத்தும் வகையில் பொது கட்டணக் கழிவறையை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com