நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலத் திட்ட பொன்விழா

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நாட்டு நலப்பணி திட்டத்தின் பொன்விழா ஆண்டு-2018 தொடக்க விழா திங்கள்கிழமை செங்கல்பட்டு அறிஞர் அண்ணா
நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலத் திட்ட பொன்விழா


தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நாட்டு நலப்பணி திட்டத்தின் பொன்விழா ஆண்டு-2018 தொடக்க விழா திங்கள்கிழமை செங்கல்பட்டு அறிஞர் அண்ணா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் நடைபெற்றது. 
இத்திட்டத்தின் பொன்விழா ஆண்டையொட்டி மேலமையூர் கிராமத்தில் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் கு.கிரிபாபு தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் பிரபாகரன் வரவேற்றார். கல்விக் குழு தலைவர் வேலாயுதம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பள்ளியின் தலைமையாசிரியர் என்.ரெங்கசாமி, கவுன்சிலர் 
என்.சங்கர், கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதேவி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். முடிவில் பொருளியல் ஆசிரியர் ஆர்.மாயவன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை ஆ.மாரியப்பன் தொகுத்து வழங்கினார். விழாவில் மேலமையூர் கிராம பஞ்சாயத்தார், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
அடுத்ததாக, கிராமத்தில் இருந்த புதர்களையும் முட்செடி கொடிகளையும் அகற்றி சுத்தம் செய்யும் பணியையும், நெகிழியை அறவே ஒழித்து தூய்மை இந்தியா திட்டத்தினை உருவாக்கும் வகையில் பாலிதீன் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியையும் மாணவர்கள் இரு நாள்களுக்கு அந்த கிராமத்திலேயே தங்கி மேற்கொள்ள உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com