முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் இயங்கி வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் 17-ஆம் ஆண்டு தொடக்க விழாவும், முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் தலைவர் சுப்பிரமணிய ராஜு தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் பாலசுப்பிரமணியம், துறைத் தலைவர் வெங்கடாசலபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சசிகுமார் வரவேற்றார்.

பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன் கலந்துகொண்டு மாணவர்களை வரவேற்றுப் பேசியதாவது:

மாணவர்கள் கல்வியையும், ஒழுக்கத்தையும் இரு கண்களாக கருத வேண்டும். பிள்ளைகள் படிப்பதை பெற்றோர்களும் கண்காணிக்க வேண்டும். பிள்ளைகளுக்கு அன்புடன் கூடிய கண்டிப்பு தான் தற்போதைய நிலையில் தேவைப்படுகிறது. எனவே பிள்ளைகளை கட்டுப்பாட்டுடன் பெற்றோர்கள் வளர்க்க வேண்டும் என்றார்.

கல்லூரியின் இணை செயலாளர் கஜேந்திரன், பிரபாகரன், துணைத் தலைவர் புருஷோத்தமன், தாமோதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com