டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: பொது மக்கள் முற்றுகைப் போராட்டம்

ஊத்துக்கோட்டையை அடுத்த எல்லாபுரம் அருகே உள்ள வெங்கல் கிராமத்தில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

ஊத்துக்கோட்டையை அடுத்த எல்லாபுரம் அருகே உள்ள வெங்கல் கிராமத்தில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
வெங்கல் கிராமத்தில் மாநில நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் கடை நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்டது. இந்தக் கடையை வெங்கல் அருகே உள்ள மாம்பள்ளம் பகுதிக்கு அதிகாரிகள் இடம் மாற்றம் செய்தனர்.
இதை அறிந்த மாம்பள்ளம், காதர்வேடு, செம்பேடு, பாகல்மேடு பகுதி மக்கள் தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 8-ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த டாஸ்மாக் அதிகாரிகள், கடையை அகற்றுவதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், டாஸ்மாக் கடை தொடர்ந்து இயங்கி வந்தது.
இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மாலை டாஸ்மாக் கடையை மீண்டும் முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கல் காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையிலான போலீஸார், வருவாய்த்துறை அதிகாரிகள், ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி. மாணிக்கம் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனாலும், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இரவு 7 மணி அளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.
பொன்னேரியில்...
பொன்னேரி, ஏப். 22: பொன்னேரி அருகே அலமாதி கிராமத்தில் தொழில் நிறுவனங்களுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் சனிக்கிழமை கடையை திறக்க விடாமல் போராட்டம் நடத்தினர்.
அலமாதி கிராமத்தில் செங்குன்றம்-திருவள்ளூர் சாலையில் இருந்த டாஸ்மாக் கடை உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி அகற்றப்பட்டு, அந்தக் கடை தொழில் நிறுவனங்கள் உள்ள பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் பணிபுரியும் பெண்கள் டாஸ்மாக் கடையை கடந்து செல்ல பெரிதும் அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, அப்பகுதி மக்கள் கடையை திறக்க விடாமல் சனிக்கிழமை போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீஸார், டாஸ்மாக் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com