சாலையோரம் கன்டெய்னர்களை நிறுத்தினால் நடவடிக்கை: உதவி ஆணையர் எச்சரிக்கை
By DIN | Published on : 18th July 2017 03:29 AM | அ+அ அ- |
சாலையோரம் கன்டெய்னர்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாதவரம் போக்குவரத்து உதவி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை பாடி - மணலி 200 அடி சாலை வழியாக எண்ணூர் துறைமுகத்துக்கும், மணலிக்கும் தினசரி 300-க்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள், டேங்கர் லாரிகள் செல்கின்றன. இதுபோன்ற வாகனங்களை இரவு நேரங்களில் ஓட்டுநர்கள் சாலையோரம் நிறுத்தி விடுகின்றனர். இந்நிலையில், அவ்வழியாக வரும் இரு சக்கர வாகனங்கள், கார், ஆட்டோ உள்ளிட்ட பல வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்படுகின்ற லாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றன. இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
இனி சாலையோரம் லாரிகள் நிறுத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாதவரம் போக்குவரத்து புதிய உதவி ஆணையர் (பொறுப்பு) இட்லர், லாரி ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.