நாளை ஜிஎஸ்டி கருத்தரங்கம்

ஜிஎஸ்டி குறித்து வியாபாரிகள், விவசாயிகளுக்கு விளக்கும் நோக்கில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புதன்கிழமை கருத்தரங்கம்

ஜிஎஸ்டி குறித்து வியாபாரிகள், விவசாயிகளுக்கு விளக்கும் நோக்கில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புதன்கிழமை கருத்தரங்கம்
நடைபெறுகிறது.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ள நிலையில் உரங்களின் விலையில் திருத்தம் வந்துள்ளது. இந்நிலையில் கும்மிடிப்பூண்டி வேளாண் துறை அலுவலகம் சார்பில் ஜிஎஸ்டி கருத்தரங்கம் நடைபெறுகிறது.
வேளாண் துறை உதவி இயக்குநர் இரா.ரவிச்சந்திரன் தலைமையில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புதன்கிழமை மாலை 3 மணிக்கு இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இதில், வேளாண் உதவி இயக்குநர் (தரக் கட்டுப்பாடு) எபினேசர் பங்கேற்று, ஜிஎஸ்டி-க்கு பிறகு உரங்களின் விலையில் ஏற்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து பேசுகிறார்.
இதில், சில்லறை மற்றும் மொத்த உர வியாபாரிகள், விவசாயிகள் கலந்து கொள்ளலாம் என கும்மிடிப்பூண்டி வேளாண் உதவி இயக்குநர் ரவிச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com