பொன்னேரி ரயில் நிலையத்தில் வெயிலில், மழையில் வீணாகும் இரு சக்கர வாகனங்கள்!

பொன்னேரி ரயில் நிலையத்தில் உள்ள இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தில் மேற்கூரை அமைக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்கூரையின்றி உள்ள பொன்னேரி ரயில் நிலைய இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம்.
மேற்கூரையின்றி உள்ள பொன்னேரி ரயில் நிலைய இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம்.

பொன்னேரி ரயில் நிலையத்தில் உள்ள இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தில் மேற்கூரை அமைக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி புறநகர் வழித்தடத்தில் பிரதானமானது பொன்னேரி ரயில் நிலையம்.
இங்கிருந்து சென்னை சென்ட்ரல், கடற்கரை, கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு, ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள், பணிக்கு செல்வோர் என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் ரயிலில் சென்று வருகின்றனர்.
பொன்னேரி ரயில் நிலையம் அருகே ரயில்வே துறைக்குச் சொந்தமான இடத்தில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் இரு சக்கர வாகன நிறுத்தம் உள்ளது. இங்கு சிறு பகுதிக்கு மட்டுமே மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் வெயில், மழையில் கிடந்து வீணாகும் நிலை உள்ளது.
எனவே, பொன்னேரி ரயில் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்துக்கு முழுமையாக மேற்கூரை அமைக்க சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் முன் வர வேண்டும் என்றும், இதனை ரயில்வே நிர்வாகத்தினர் உறுதி செய்ய வேண்டும் என்றும், வாகனங்களை நிறுத்திச் செல்லும் ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com