மயானத்தை ஆக்கிரமித்து கடைகள்: ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்

திருவள்ளூர் அருகே மயானத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அகற்றக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) கே.முத்துவிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
அரண்வாயல் கிராமத்தில் மயான ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பொது மக்கள்.
அரண்வாயல் கிராமத்தில் மயான ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பொது மக்கள்.

திருவள்ளூர் அருகே மயானத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அகற்றக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) கே.முத்துவிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு வந்தனர். அப்போது, அவர்கள் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) கே.முத்துவிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், 'அரண்வாயல் கிராமத்தில் இரு சமூகத்தாருக்கு ஒதுக்கப்பட்டுள்ள மயானத்தை ஆக்கிரமித்து, சிலர் கடைகளை கட்டியுள்ளனர். இதனால் மயானம் குறுகியுள்ளதோடு, சடலங்களை எடுத்துச் செல்வதிலும் சிரமம் உள்ளது.
எனவே, மயான இடத்தை முறைப்படி அளந்து, சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும். அங்கு ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளையும் இடித்து அகற்ற வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
நிலத்தடி நீர் மாசு: அதே கிராமத்தினர் அளித்த மற்றொரு மனுவில், 'அரண்வாயல் பகுதியில் இயங்கி வரும் மதுபான ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் அப்பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் விடப்படுகிறது. இதனால், அரண்வாயல் பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது.
மேலும், ஆலையில் காலை 5 மணி முதல் 10 மணி வரையில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பலர் ஒவ்வாமை, சுவாசக் கோளாறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தினர் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com