குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

மிடிப்பூண்டியை அடுத்த காயலார்மேட்டில் தடையில்லாமல் குடிநீர் வழங்க கோரி, அப்பகுதி மக்கள் மாதர்பாக்கம்-கும்மிடிப்பூண்டி சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திர பாபு.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திர பாபு.

கும்மிடிப்பூண்டியை அடுத்த காயலார்மேட்டில் தடையில்லாமல் குடிநீர் வழங்க கோரி, அப்பகுதி மக்கள் மாதர்பாக்கம்-கும்மிடிப்பூண்டி சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்கு உள்பட்டது காயலார்மேடு. இப்பகுதியில் சுமார் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மேலும், காயலார்மேட்டைச் சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த தொழிற்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத ஆழ்துளைக் கிணறுகளால் இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியானது இப்பகுதி மக்களுக்கு போதுமானதாக இல்லை. அதேநேரம், அடிக்கடி மேல்நிலைத் தொட்டியில் இருந்து இப்பகுதிக்கு தண்ணீர் கொண்டு வரும் 'மோட்டாரில் பழுது ஏற்பட்டு தண்ணீர் வழங்கப்படுவது தடைபடுகிறது.
ஊராட்சி நிர்வாகம் செயல்படாத காரணத்தால் பழுது உடனடியாக சரிசெய்யப்படவில்லை.
இதனால், காயலார்மேடு பகுதியில் கடந்த 2 நாள்களாக பொதுக்குழாயில் குடிநீர் வரவில்லை. இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள், மாதர்பாக்கம்-கும்மிடிப்பூண்டி சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திர பாபு, அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, குடிநீர் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com