டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடியதால் மிரட்டல்: ஆட்சியரிடம் பெண்கள் மனு

ஊத்துக்கோட்டை அருகே டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியதால், குண்டர்கள் தங்களை மிரட்டுவதாகவும், அவர்களிடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும்
பாதுகாப்பு கோரி, ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த மாம்பள்ளம் கிராம பெண்கள்
பாதுகாப்பு கோரி, ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த மாம்பள்ளம் கிராம பெண்கள்

ஊத்துக்கோட்டை அருகே டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியதால், குண்டர்கள் தங்களை மிரட்டுவதாகவும், அவர்களிடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் ஆட்சியரிடம் பெண்கள் புதன்கிழமை மனு அளித்தனர்.
ஊத்துக்கோட்டை வட்டம், வெங்கல் பகுதியில் உள்ள மாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டம் நடத்தினர்.
பின்னர், அவர்கள் ஆட்சியர் (பொறுப்பு) கே.முத்துவிடம் மனு அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: வெங்கல் கிராம எல்லையில் 2 மாதத்துக்கு முன் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த வழியாக பள்ளி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில், அங்கு உள்ள டாஸ்மாக் கடைக்கு வருவோர், மது அருந்திவிட்டு அத்துமீறல்
களில் ஈடுபடுகின்றனர்.
இதனால், அந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி, டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட முயன்றபோது வெங்கல் போலீஸார் பொதுமக்களை மிரட்டி எச்சரித்தனர்.
பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய போலீஸாரே, அடியாள்கள் போன்று செயல்படுகின்றனர். இதனால், குண்டர்கள் தைரியமாக எங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
எனவே, எங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை மூடுவதற்கு ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com