மதுக் கடை அமைக்க எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

அத்திப்பட்டு ஊராட்சியில் டாஸ்மாக் மதுக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சியர்
அத்திப்பட்டில் மதுக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பொதுமக்கள்.
அத்திப்பட்டில் மதுக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

அத்திப்பட்டு ஊராட்சியில் டாஸ்மாக் மதுக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, அத்திப்பட்டு முன்னாள் ஊராட்சித் தலைவர் கதிர்வேல் தலைமையில் அப்பகுதி பெண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு ஆட்சியர் எ.சுந்தரவல்லியிடம் மனு அளித்தனர். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மருத்துவமனைகள், பழைமைவாய்ந்த கோயில்கள் உள்ளன.
தொழிற்சாலைகள் நிறைந்த இப்பகுதியில், வெளி மாநில தொழிலாளர்களும் தங்கியுள்ளனர். இந்த ஊராட்சியில் ஏற்கெனவே உள்ள 3 மதுக் கடைகளை அகற்றக் கோரி, ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி சம்பந்தப்பட்ட துறைக்கு நகல் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் அத்திப்பட்டு புதுநகர் - கரையான்மேடு இடையே மேலும் புதிதாக டாஸ்மாக் கடையைத் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
எனவே, ஊராட்சியில் புதிதாக மதுக் கடை திறப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com