குசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திருட்டு: மின் மோட்டார் பறிமுதல்

திருவள்ளூர் அருகே குசஸ்தலை ஆற்றில் உரிய அனுமதியின்றி தண்ணீர் எடுக்கப் பயன்படுத்திய மின் மோட்டார்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
குசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திருட்டு: மின் மோட்டார் பறிமுதல்

திருவள்ளூர் அருகே குசஸ்தலை ஆற்றில் உரிய அனுமதியின்றி தண்ணீர் எடுக்கப் பயன்படுத்திய மின் மோட்டார்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
திருவள்ளூரை அடுத்த குசஸ்தலை ஆற்றில் ஒதப்பை, ஆட்டரம்பாக்கம் பகுதிகளில் விவசாயிகள் பலர் அனுமதியின்றி கிணறு அமைத்து, ஆயில் எஞ்ஜின் மற்றும் பம்புசெட் மூலம் தண்ணீரை உறிஞ்சி விவசாய நிலங்களுக்கு பாய்ச்சுவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி இதுகுறித்து ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ-க்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ தலைமையில், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் அசோகன், உதவி செயற்பொறியாளர் செல்வகுமார் ஆகியோர் புதன்கிழமை ஒதப்பை மற்றும் ஆட்டரம்பாக்கம் பகுதிகளில் உள்ள குசஸ்தலை ஆற்றில் ஆய்வு செய்தனர். அப்போது ஆற்றின் கரையோரம் எவ்வித அனுமதியும் இன்றி ஏராளமான கிணறுகள் அமைக்கப்பட்டு, ஆயில் என்ஜின் மற்றும் பம்பு செட் மூலம் தண்ணீர் உறிஞ்சி விவசாய நிலங்களுக்கு பாய்ச்சி வருவது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து தண்ணீர் எடுக்க பயன்படுத்திய ஆயில் என்ஜின், பம்பு செட் உள்ளிட்ட பொருள்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி பறிமுதல் செய்தனர். மேலும், இதற்கு இலவச மின்சாரத்தை பல விவசாயிகள் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல் நிலையத்தில், சம்பந்தப்பட்ட விவசாயிகள் மீது புகார் கொடுத்து, மின் இணைப்பை துண்டிக்கவும் அதிகாரிகளுக்கு கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.
ஆறு, ஏரி, குளம், குட்டைகள் போன்ற நீர்நிலைகளில் இருந்து, அரசு அனுமதியின்றி முறைகேடாக தண்ணீர் எடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மின் இணைப்புகளும் துண்டிக்கப்படும் என பொதுப்பணித் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com