விழிப்புணர்வுப் பேரணி

கும்மிடிப்பூண்டி காந்தி உலக மையம் மற்றும் எளாவூர் விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆகியன சார்பில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றுதல் குறித்த விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி காந்தி உலக மையம் மற்றும் எளாவூர் விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆகியன சார்பில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றுதல் குறித்த விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, காந்தி உலக மைய நிறுவனர் எம்.எல்.ராஜேஷ் தலைமை வகித்தார். விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளித் தாளாளர் மணி, முதல்வர் மோகன்ராஜ், காந்தி உலக மைய நிர்வாகிகள் இ.எஸ்.ராமசந்திரன், பிரதாப், விஜயலட்சுமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் தாமு கலந்து கொண்டு பேரணியைத் தொடங்கி வைத்தார்.
இதில், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, சீமைக் கருவேல மரங்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தி, எளாவூர் பஜார், துராப்பள்ளம் பகுதிகள் வழியாகச் சென்றனர். இதைத் தொடர்ந்து, துராப்பள்ளம் பகுதியில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியிலும் ஈடுபட்டனர். இதில், சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com