விவசாயிகளின் பங்களிப்புடன் குடிமராமத்துப் பணி

கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதி விவசாயிகளின் பயன்பாட்டுக்காக ஏரிகளை சீரமைக்கும் திட்டமான குடிமராமத்துப் பணிகள் குறித்த அறிமுக கூட்டம் செவ்வாய்க்கிழமை புதுமாவிலங்கையில் நடைபெற்றது.

கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதி விவசாயிகளின் பயன்பாட்டுக்காக ஏரிகளை சீரமைக்கும் திட்டமான குடிமராமத்துப் பணிகள் குறித்த அறிமுக கூட்டம் செவ்வாய்க்கிழமை புதுமாவிலங்கையில் நடைபெற்றது.
பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் செல்வ
குமார் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் வருவாய் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, பேரம்பாக்கம் முன்னாள் தலைவர் ஆர்.டி.இ.சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
இதில் திருவள்ளூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ கலந்து கொண்டு பேசியது: புதுமாவிலங்கை, எம்ஜிஆர் நகர், சத்தரை, பேரம்பாக்கம், அகரம் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விவசாயத்துக்கு பயன்படும் ஏரிகளை குடிமராமத்து திட்டத்தின் கீழ் சீரமைக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் பொதுப்
பணித் துறைக்கு சொந்தமான ஏரிகளில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவது, செடி, கொடிகளை அகற்றுவது, ஏரிகளின் கரைகள் மற்றும் மதகுகளைச் சீரமைப்பது, நீர்வரத்து கால்வாய்களை சீரமைப்பது, தூர் வாரி ஆழப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம்.
இதற்கான செலவில் 90 சதவீதம் பொதுப்பணித் துறையும், 10 சதவீதம் சம்பந்தப்பட்ட பகுதி விவசாயிகளின் பங்களிப்பாக இருக்க வேண்டும்.
 பணமாக இல்லாவிட்டாலும், செங்கல், மணல் போன்ற சீரமைப்புக்குத் தேவையான பொருள்களாகவும் வழங்கலாம் என்றார்.
இந்நிகழ்ச்சியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று இத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக ஆர்வமுடன் உறுதியளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com