சேவாலயா பள்ளியில் 99.3% தேர்ச்சி

திருநின்றவூரை அடுத்த கசுவா கிராமம், சேவாலயாவில் இயங்கி வரும் மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 99.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருநின்றவூரை அடுத்த கசுவா கிராமம், சேவாலயாவில் இயங்கி வரும் மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 99.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர் சூர்யா கை, கால்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும் தேர்வில் பங்கேற்று, 391 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இப்பள்ளியில், தேர்வெழுதிய 127 மாணவர்களில் 126 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில், 66 மாணவர்கள் 80 சதவீதத்துக்கு மேலும், 22 மாணவர்கள் 70 சதவீதத்துக்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மாணவி சங்கீதா 480 மதிப்பெண்களும், பவானி 479 மதிப்பெண்களும், மாணவர் கிருபாகரன் 478 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
ஸ்ரீநிகேதன் பள்ளியில்: திருவள்ளூரில் உள்ள ஸ்ரீநிகேதன் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
பள்ளியளவில் முதலிடமாக 496 மதிப்பெண்ணும், 2-ஆவது இடமாக 495 மதிப்பெண்ணும், மூன்றாவது இடமாக 493 மதிப்பெண்ணும் மாணவர்கள் எடுத்துள்ளனர்.
இப்பள்ளியில் தேர்வெழுதியவர்களில் 490 மதிப்பெண்களுக்கு மேல் 11 மாணவர்களும், 450-க்கு மேல் 70 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிறப்பிடம்பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைவர் பன்னீர்செல்வம், தாளாளர் விஷ்ணுசரண், அறங்காவலர் ரேவதி பன்னீர்செல்வம், இயக்குநர் பரணிதரன், பள்ளி முதல்வர் மாலதிராயன், தலைமை ஆசிரியர் வி.வருண்குமார், ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com