மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.6.50 லட்சம் கடனுதவி

திருத்தணியை அடுத்த வேலஞ்சேரி கிராமத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வெள்ளிக்கிழமை ரூ.6.50 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.

திருத்தணியை அடுத்த வேலஞ்சேரி கிராமத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வெள்ளிக்கிழமை ரூ.6.50 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
திருத்தணி சிண்டிகேட் வங்கி கிளை சார்பில் "கிராமங்களுடன் நேரடி தொடர்பு' நிகழ்ச்சி தொடக்க விழா வேலஞ்சேரியில் நடைபெற்றது. வங்கி மேலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். உதவி மேலாளர் பிரகாஷ் வரவேற்றார்.
இதில், வங்கியின் சென்னை மண்டல மேலாளர் ரெட்டி, முதுநிலை மேலாளர் ரவீந்திரநாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, இரண்டு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கறவை மாடுகள், சுயதொழில் செய்வதற்கு ரூ.6.50 லட்சத்துக்கான கடனுதவியை வழங்கினர்.
பின்னர், வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார், செல்லிடப்பேசி எண்களை இணைப்பதன் முக்கியத்துவம் குறித்தும், மொபைல், நெட் பேங்கிங், பல வகையான கடன் விவரங்கள் உள்ளிட்டவை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
 இந்நிகழ்ச்சியில், வங்கியின் வளர்ச்சி அலுவலர் அற்புதசங்கரி, வர்த்தக தொடர்பாளர் உதயகுமார், மகளிர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com