டாக்டர் ராதாகிருஷ்ணன் நூலகத்தில் நூலகர் பணியிடம் உருவாக்கப்படுமா?

திருத்தணி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நூலகத்தில் நூலகர் பணியிடம் இல்லாததால், பல நூல்கள் வாசகர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

திருத்தணி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நூலகத்தில் நூலகர் பணியிடம் இல்லாததால், பல நூல்கள் வாசகர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெருவில் ஆதரவற்ற மாணவர் காப்பகம், நூலகம் இயங்கி வருகிறது. இந்ந நூலகத்தில் பல அரிய நூல்கள், பழைமையான பக்தி இலக்கிய நூல்கள் என பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. மேலும், கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயன்படக்கூடிய குறிப்புதவி நூல்களும் இங்கு இருக்கின்றன.
இதுதவிர நாளிதழ், வார, மாத இதழ்களும் வாசகர்கள் படித்து பயன்பெற வைக்கப்பட்டுள்ளன. ஆனால், நூலகர் இல்லாத காரணத்தால் வாசகர்கள் இங்குள்ள நூல்களை எடுத்து படிப்பதற்கோ, தேவையான குறிப்புகளை எடுப்பதற்கோ முடியவில்லை.
கடந்த காலங்களில் கோயில் புலவர் என்ற பதவியில் இருந்தவர் இப்பணியை பார்த்துக்கொண்டார். அவர்களுக்கு ஆசிரியர் பணி கிடைத்து, சென்றுவிட்டதால், இப்பணியிடம் இன்னும் நிரப்பப் படாமலேயே உள்ளது. மேலும் பட்டப்படிப்பு அல்லது நூலகர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி, தோல்வியடைந்த ஜவான்கள் கவனித்து வருகின்றனர்.
அவர்கள் நூலகத்தின் முக்கியத்துவம் பற்றி தெரியாமல் செயல்பட்டு வருகின்றனர். எனவே, தினமும் பல வாசகர்கள் வந்து செல்வதால், தனியாக நூலகப் பணியிடம் தோற்றுவித்தோ அல்லது கோயில் புலவர் பணியிடத்தை நிரப்பியோ டாக்டர் ராதாகிருஷ்ணன் நூலகத்துக்கு புத்துயிர் ஊட்டும்படி இப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com