மணல் கொள்ளையை தடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

தாமரைப்பாக்கம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில்  கொசஸ்தலை ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு

தாமரைப்பாக்கம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில்  கொசஸ்தலை ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தாமரைப்பாக்கம் அருகே கொசஸ்தலை ஆற்றுப்படுகை பகுதிகளான மெய்யூர், இறையூர், விளாப்பாக்கம், செம்பேடு, காதர்வேடு, வெள்ளியூர், தாமரைப்பாக்கம், பாகல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் கொசஸ்தலை ஆற்றில் தினமும் இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.
அதேபோல ஆரணி ஆற்றில் மாளந்தூர், கல்பட்டு, செங்காத்தாகுளம், கீழ்மாளிகைப்பட்டு, காந்தி நகர், மேல்மாளிகைப்பட்டு, ஏனாம்பாக்கம் பகுதிகளில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. கொசஸ்தலை ஆற்றில் திருக்கண்டலம், வெள்ளியூர், மேல்செம்பேடு பகுதிகளில் உள்ள தடுப்பணைகள் உடைந்த நிலையில், அதனை அதிகாரிகள் சீரமைக்கவில்லை.
இந்நிலையில், கொசஸ்தலை, ஆரணி ஆற்றில் மணல் திருட்டைத் தடுக்கவும், சேதமடைந்த தடுப்பணைகளை சீரமைக்கவும் தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கொசஸ்தலை ஆற்று பாதுகாப்பு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஜி.சம்பத் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.சண்முகம், உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
தொடர்ந்து, கொசஸ்தலை ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com